பரதன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 60-வது படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முழுவதும் சென்னையில் நடந்து முடிந்தது. இதைதொடர்ந்து இதன் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் விஜய், ஜகபதி பாபு மற்றும் அபர்ணா வினோத் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாகி வருகிறது.
இதுவரை இப்படத்தில் இரண்டு பாடல் காட்சிகள் படமாகியுள்ளது. இதை நாம் ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இதன் மூன்றாவது பாடல் காட்சி விரைவில் சுவிட்சர்லாந்தில் படமாகபோவதாக தகவல் வெளியாகியுள்ளது. சந்தோஷ் நாராயணன் பாடல் சுவிட்சர்லாந்தில் படமாவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment