அலரிமாளிகைக்கு அழைத்து நிற்கவைத்து கேள்வி கேட்டனர்! "ஜனாதிபதி"

மதுசார மற்றும் புகைத்தலுக்கு எதிரான வேலைத்திட்டத்தின்போது அரசு மிகத் தெளிவானதும் நேரடியானதுமான தீர்மானங்களை மேற்கொள்ளும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தற்போது குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் வருமானத்தில் 35% வீதம் மதுபானம் மற்றும் புகைத்தல் என்பவற்றிற்கு செலவிடப்படுகின்றது.
இது நாட்டில் வறுமை நிலை அதிகரிப்பதற்கும் மக்களின் சுகாதாரம் குன்றுவதற்கும் முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
எனவே இவ்விடயம் தொடர்பாக அரசு மிகுந்த அவதானத்துடன் செயற்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஏனைய உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் புகைத்தலுக்கு எதிராக நாம் முன்னெடுத்த போராட்டத்தின் விளைவாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்குள் இந்நாட்டில் புகைப்பிடிக்கும் ஆண்களின் தொகை சுமார் 5% வீதத்தினால் குறைவடைந்துள்ளது.
இந்நிலைமையை மேலும் விருத்தி செய்வதற்
கு அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
வர்த்தக துறையின் தந்திரோபாயங்கள் மற்றும் மக்களை கவரும் விதமான விளம்பரங்களினால் எமது இளைஞர் சமுதாயம் வழி தவறி செல்கின்றது.
எனவே, இதனை தோற்கடிப்பதற்காக கைகோர்ப்பது அனைவரதும் பொறுப்பாகுமென ஜனாதிபதி இதன் போது தெரிவித்தார்.
எமது நாட்டின் பெயரை உள்ளடக்கியதாக இலங்கை புகையிலை கம்பனி செயற்பட்டபோதிலும் எமது நாடு இதன் பங்காளராக செயற்படவில்லை.
மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்தவிதமான வருமான வழிகளுடனும் அரசு பணியாற்ற மாட்டது.
அன்று சிகரெட் பக்கட்டில் சுகாதார எச்சரிக்கையை 80% வீதமாக மாற்றுவதற்காக வர்த்தமானி அறிக்கை வெளியிடப்பட்டதன் காரணமாக அலரி மாளிகையில் கதிரைகளில் அமர்ந்திருந்த புகையிலை கம்பனிகளின் பணிப்பாளர்கள் முன்னிலையில் விளக்கமளிப்பதற்கு நேர்ந்தது.
இதனை நாட்டு மக்கள் அவதானத்துடன் நோக்கியதன் காரணமாக இந்த நாட்டின் தாம் ஜனாதிபதியாக பதவி வகிப்பதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.
Share on Google Plus

About சாணக்கியன்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment