முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு வழங்கப்பட்ட இராணுவப் பாதுகாப்பு இன்றுடன் முழுமையாக நீக்கப்படவுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு வழங்கப்பட்டிருந்த இராணுவப் பாதுகாப்பின் ஒரு தொகுதி இதற்கு முன்னதாக நீக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது .
பாதுகாப்பு வழங்கி வந்த எஞ்சிய படை அதிகாரிகளும் இராணுவ உத்தியோகத்தர்களும் இன்று வாபஸ் பெற்றுக் கொள்ளப்படவுள்ளதாக இராணுவத் தலைமையகம் அறிவித்துள்ளது.
இந்த உத்தரவிற்கு அமைய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு பாதுகாப்பு வழங்கிய இராணுவ அதிகாரிகளும் உத்தியோகத்தர்களும் இன்று அல்லது நாளை அளவில் முழுமையாக வாபஸ் பெற்றுக் கொள்ளப்படவுள்ளனர்.
மஹிந்தவின் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த இராணுவ உத்தியோகத்தர்களின் ஒரு தொகுதியினர் மே மாதம் 2ம் திகதி நீக்கப்பட்டிருந்தனர்.
ஏனையவர்களை வாபஸ் பெற்றுக் கொள்ளுமாறு சில வாரங்களுக்கு முன்னதாக உத்தரவிட்ட போதிலும்இ பின்னர் அந்த உத்தரவு இடைநிறுத்தப்பட்டது.
இதேவேளைஇ மஹிந்தவின் இராணுவப் பாதுகாப்பை நீக்க வேண்டாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேற்று முன்தினம் பெவிதி ஹன்ட அமைப்பு கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment