30 வருடங்களுக்கு பிற்பாடு முதன்முதலாக யாழ்ப்பாணத்துக்கு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சராக தமிழ் உத்தியோகத்தர் ஒருவர் நியமனம் பெற்று உள்ளார்.
யாழ்ப்பாணத்தில் குற்றச் செயல்கள் அதிகரித்து செல்வதை கருத்தில் கொண்டு கஸ்ரன் ஸ்ரனிஸ்லோஸுக்கு இந்நியமனம் வழங்கப்பட்டு உள்ளது.
ஸ்ரனிஸ்லோஸ் மட்டக்களப்பு தமிழர். யாழ்ப்பாணத்தின் முதலாவது
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சராக 1984 ஆம் ஆண்டு கடமையாற்றிய ஐ. ரி. கனகரத்தினத்தின் மருமகன். பொலிஸ் சேவையில் 38 வருடங்களை பூர்த்தி செய்து உள்ளார். பொலிஸில் ஒழுக்கம் மற்றும் நன்னடத்தை பிரிவின் முழு இலங்கைக்குமான பொறுப்பதிகாரியாக செயற்பட்டார்.இவர் 1980 களில் சப் இன்ஸ்பெக்டராக சாவகச்சேரி, கிளிநொச்சி ஆகிய பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றி உள்ளார்.
0 comments:
Post a Comment