சார் எனக்கு எப்பவுமே ஒரு கெட்டப் பழக்கம் இருக்கு. அது என்னன்னு தெரியுமா. யாராவது நல்லதோ செஞ்சா அதை திட்டுவேன்.. கெட்டது செஞ்சா பாராட்டுவேன். இந்த வசனம் வேற யாருக்குமில்ல. நம்ம செக்ஸ் இயக்குனர் ராம் கோபால் வர்மாவுக்குதான்.
தமிழகத்தில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போராட்டங்களை கொச்சைப்படுத்தும் வகையில் இயக்குநர் ராம் கோபல் வர்மா கருத்துகளை வெளியிட்டு வருகிறார். எப்போதும் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு,பின்னர் செமத்தியாக வாங்கி கட்டிக் கொள்ளும் இயக்குநர் ராம் கோபால் வர்மா தற்போது ஜல்லிக்கட்டு போராட்டங்கள் குறித்தும் அவதூறாக பேசியுள்ளார். சிடி வித்த நாய் தானேடா நீ என்று தமிழக இளைஞர்கள் இவர் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள். அப்படி என்னதான் இவர் கூறினார் என்று கேட்பவர்கள் அடுத்த பாராவில் படிக்கவும்...
”ஜல்லிக்கட்டுக்காக போராடுபவர்கள் மீது 1000 காளைகளை ஓட விட வேண்டும்.அதன் பின்னர் எத்தனை பேர் போராடுகிறார்கள் என்பதை பார்க்கலாம். நடிகை திரிஷாவை திட்டி வெளியிடப்பட்டுள்ள கருத்துகளை பார்க்கும் போது, போராட்டம் செய்பவர்கள்தான் விலங்குகள் என்பது உறுதியாக தெரிகிறது.
அப்பாவி ஜீவன்களை பாதுகாக்க முயற்சி எடுக்கும் பீட்டாவை தீவிரவாத இயக்கம் என கூறுபவர்கள்தான் உண்மையான தீவிரவாதிகள்.ஜல்லிக்கட்டுக்காக போராடும் முட்டாள்களுக்கு,அவர்கள் முட்டாள்கள் என்பதே தெரியாது.தமிழ்நாட்டின் பெயரை ஜல்லிக்கட்டு என மாற்றம் செய்யக் கோரி,ஐ.நா சபையிடம் பீட்டா அமைப்பு கோரிக்கை வைக்க வேண்டும்.மேலும் அந்த மாநிலத்திற்கு மன நல சிகிச்சையும் அளிக்கப்பட வேண்டும்.”என சகட்டுமேனிக்கு தனது டிவிட்டர் பதில் தமிழர்களை கொச்சைப்படுத்தியுள்ளார் ராம் கோபால் வர்மா.
படிக்கிற பசங்கள கூட்டிட்டு போய் செக்ஸ் படம் எடுக்குறவனெல்லாம் இயக்குனர்னு மக்கள் ஏத்துகிட்டாங்களே அவங்கள சொல்லனும்...
0 comments:
Post a Comment