மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்து மக்கள் நல கூட்டியக்க தலைவர்கள் ஜி. ராமகிருஷ்ணன், தொல். திருமாவளவன், இரா.முத்தரசன் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மாணவர்கள் மீது தாக்குதல்: ஜி.ராமகிருஷ்ணன், திருமாவளவன், முத்தரசன் சாலை மறியல்
சென்னை:
ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக போராடிய மாணவர்கள் இளைஞர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதை கண்டித்து மக்கள் நல கூட்டியக்க தலைவர்கள் ஜி.ராமகிருஷ்ணன், தொல்.திருமாவளவன், இரா.முத்தரசன் ஆகியோர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போலீசார் தடுத்து மறிப்பார்கள் என அறிந்து 3 பேரும் ஒரே காரில் கடற்கரை சாலை நோக்கி சென்றனர். கடற்கரை சாலைக்கு எந்த வாகனங்களையும் செல்ல விடாமல் போலீசார் தடுப்பு வைத்து மறித்து இருந்தனர்.
மாணவர்களை பார்ப் பதற்காக ராதா கிருஷ்ணன் சாலை வழியாக சென்ற அவர்களது காரை போலீசார் தடுத்து மறித் தார்கள். இதையடுத்து ஜி.ராமகிருஷ்ணன், திருமா வளவன், முத்தரசன் ஆகிய 3 பேரும் மியூசிக் அகாடமி அருகில் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து நெரிச லுக்கு இடையே 3 தலைவர் களும் தொண்டர் களுடன் சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். இதனால் அந்த சாலையில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், இளைஞர்கள் மீது கண்மூடித்தனமாக காவல்துறை தாக்கியதை கண்டித்து கோஷமிட்டார்கள்.
0 comments:
Post a Comment