படித்தவர்களுக்கு தற்போது வேலை என்பது குதிரைக் கொம்பாகிவிட்டது. அதேநேரம் படிக்காவிட்டாலும் கைத் தொழில் தெரிந்தால் சென்னை உள்பட பெருநகரங்களில் மிகப்பெரிய வருமானத்தை ஈட்ட முடியும். சென்னையில் டீ மாஸ்டர் பரோட்டா மாஸ்டர் உள்பட சமையல்கலை தெரிந்தவர்களின் தேவை தற்போது அதிகமாக உள்ளது.
இதேபோல் பல்வேறு தொழில் தெரிந்தவர்களுக்கு வேலை அதிகமாக உள்ளது. அந்த வகையில் இளநீர் சிவ தெரிந்தால் சென்னையில் ரூபாய் 32 ஆயிரம் வரை சம்பளத்துடன் வேலை கிடைக்கும் என இன்றைய தினத்தந்தி வரி விளம்பரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. அந்த விளம்பரத்தில் உள்ள நண்பரை தொடர்பு கொண்டு கேட்டபோது ஆம் உண்மை தான் இந்த தகவல் நாளை காலை நீங்கள் ஆழ்வார்ப்பேட்டையில் எங்கள் இடத்திற்கு வாருங்கள் என்று நம்மை அழைத்தார். அதன் விவரங்களை இப்போது உங்கள் பார்வைக்கு...
சம்பளம் ரூ.22,000 - ரூ.32,000
இன்றைய (15.03.19) தினத்தந்தியில் வரி விளம்பரம் பகுதியில் வந்திருக்கும் விளம்பரம்:
இளநீர் சீவ சம்பளம் ரூ.22,000 to ரூ.32,000 - 51/31, பீமன்னா 1st st, ஆழ்வார்பேட், Chn. 9840824174
தொழில் தெரிந்தவர்கள் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
ற்று நேரத்தில் முக்கிய அறிவிப்பு; பரபரப்பில் அண்ணா அறிவாலயம்
Anna
Last Updated: வெள்ளி, 15 மார்ச் 2019 (13:13 IST)
திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதி பட்டியல் இன்னும் சற்று நேரத்தில் வெளியாக இருக்கிறது.
திமுக கூட்டணியில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் திமுக 20, காங்கிரஸ் 10, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 தொகுதிகள், மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2, விடுதலை சிறுத்தைகள் கட்சி 2 கட்சிகள் , மறுமலர்ச்சி திராவிடர் முன்னேற்ற கழகம் 1 தொகுதி (ராஜ்ய சபா தொகுதி 1), முஸ்லிம் லீக் 1 தொகுதி , கொங்கு மக்கள் 1, ஐ ஜே கே 1 என பங்கிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் யாருக்கு எந்தெந்த தொகுதி என்ற தொகுதிப்பட்டியல் குறித்த ஆலோசனை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது. கூட்டணி கட்சி தலைவர்கள் அறிவாலயம் வந்த வண்ணம் இருக்கின்றனர். இன்னும் சற்று நேரத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் தொகுதி பட்டியலை திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட இருக்கிறார்.
0 comments:
Post a Comment