ஐபிஎல் கிரிக்கெட் போட்டி எங்கு நடந்தாலும், கூட்டம் கூட்டமாக கிளம்பி நேரடியாக விளையாட்டு மைதானத்துக்குப் போய் பார்க்கும் ரசிகர்கள் அல்லது இருந்த இடத்தில் இருந்தபடியே தொலைக்காட்சிகளில் அல்லது ஹாட்ஸ்டாரில் பார்ப்பவர்கள் என தீவிர ரசிகர்களை இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் தொடர் உருவாக்கியிருக்கிறது.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் குழுமம் நேரடி ஒளிபரப்பு செய்து வரும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை, முதல் 4 வாரங்களில் தொலைக்காட்சி மற்றும் ‘ஹாட்ஸ்டார்’ வழியாக 41,10,00,000 பேர் கண்டுகளித்து இருப்பதாக ஸ்டார் இந்தியா அறிக்கை தெரிவிக்கிறது. இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் எண்ணிக்கை மட்டும் 52% ஆகும். கடந்த சீசனுடன் ஒப்பிடும்போது பெண் பார்வையாளர்களின் எண்ணிக்கை 15% அதிகரித்துள்ளது. கடந்த 2018-ம் ஆண்டில், ஒரு கிரிக்கெட் போட்டியை சராசரியாக 8,80,000 பெண்கள் பார்த்திருக்கிறார்கள். அது நடப்பு தொடரில் 10,10,000 அதிகரித்துள்ளது.
நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அனைத்து மொழி ரசிகர்களும் பார்த்து மகிழ வேண்டும் என்பதற்காக, தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு உட்பட பல்வேறு மொழிகளில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இதனால் நாடு முழுவதிலுமுள்ள கோடான கோடி ரசிகர்கள் பார்த்து மகிழ்கிறார்கள். கடந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட்டைப் பார்த்தவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 41,14,00,000 பேர். ஆனால் அந்த எண்ணிக்கையை இந்த ஆண்டு முதல் 4 வாரத்திலேயே நெருங்கிவிட்டது.
ஹாட்ஸ்டாரில் கிரிக்கெட் பார்த்துக்கொண்டிருக்கும் போது, அது தொடர்பான கேம்களை விளையாட முடியும், பரிசுகளை வெல்ல முடியும், நண்பர்களுடன் கிரிக்கெட் சேட் செய்ய முடியும், போன்ற ஆப்ஸன்கள் புதிதாக அறிமுகமாகியிருப்பதால், அது கிரிக்கெட் மீது ஆர்வமில்லாதவர்களைக் கூட, ஹாட்ஸ்டாரில் கிரிக்கெட்டைப் பார்க்க வைத்திருக்கிறது.
0 comments:
Post a Comment