இலங்கையில் நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக, சென்னை பூந்தமல்லியில் குடியிருப்பு ஒன்றில் தங்கியிருந்த இலங்கையை சேர்ந்த மூவரிடம் என்.ஐ.ஏ., மற்றும் கியூ பிரிவு பொலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.
தற்கொலைப் படை தீவிரவாதி ஹசன், சென்னை மண்ணடிக்கு வந்து சென்றதாக தகவல் வெளியாகி இருந்தது. ஹசன் இங்கு யாரை சந்தித்தான் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மண்ணடியில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்போது ஒருவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், இலங்கையை சேர்ந்த 3 பேரிடமும், அவர்கள் தங்கியிருந்த வீடுகளிலும் என்.ஐ.ஏ., கியூ பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment