பள்ளிவாசல் ஒன்றிலிருந்து வாள்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பான சந்தேகத்தின் பேரில் இவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் தாஜுதின் மற்றும் அவரது உறவினர் மற்றும் மெளலவி ஒருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு, கொம்பனித்தெரு பகுதியின் பள்ளிவாசல் ஒன்றிலிருந்து 40க்கும் மேற்பட்ட வாள்கள் மீட்கப்பட்டிருந்தன.
இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட அவர்களிடம் பள்ளிவாசலிலிருந்து கைப்பற்றப்பட்ட வாள்கள் என்ன நோக்கத்திற்காக கொண்டு வரப்பட்டது என்பது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment