கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இரானுவச் சீருடை மற்றும் தொலைபேசிகள் என்பன மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகத்திற்கிடமான வீடொன்றை சோதனையிட்ட போது இரானுவச் சீருடை மற்றும் கைத் தொலைபேசிகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்பிராசபுரம் பகுதியில் பொலிசாரும் இரானுவத்தினரும் இணைந்து சந்தேகத்திற்கிடமான வீடொன்றை சோதனையிட்ட போது இரானுவச் சீருடை மற்றும் கைத் தொலைபேசிகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்பிராசபுரம் பகுதியில் உள்ள வீடு ஒன்று தொடர்பில் கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவல்களையடுத்து இன்று (28-04-2019) பகல் குறித்த வீடு சோதனைக்குட்படுத்தப்பட்டது.
இதன்போது வீட்டில் இருந்து இரானுவச் சீருடை மற்றும் கைத் தொலைபேசிகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.
குறித்த வீட்டின் உரிமையாளர் தற்போது கொழும்பில் பணிபுரியும் முஸ்லீம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மீட்கப்பட்ட பொருட்கள் தருமபுரம் பொலிஸ்நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரனைகளை தருமபுரம் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment