கல்முனை - சாய்ந்தமருது பகுதியில் தீவிரவாத குழுவுக்கும் பொலிஸாருக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற மோதலில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதில் மூன்று குடும்பங்கள் தற்கொலை குண்டு தாக்குதலை மேற்கொண்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
6 ஆண்கள், 3 பெண்கள் மற்றும் 6 சிறுவர்கள் என 15 பேர் உயிரிழந்ததுடன், பெண் ஒருவரும் குழந்தை ஒருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் தற்கொலை குண்டு தாக்குதல் நடத்திய வீட்டை உடைத்து உள்ளே சென்ற அதிகாரிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
உடல் சிதறி பலியான 15 பேருடன் உயிருடன் ஒரு குழந்தை அழுதுகொண்டு இருந்துள்ளது.
குறித்த பெண் குழந்தையை இராணுவத்தினர் பாதுகாப்பாக ஏந்திக்கொண்டு வந்து முதலுதவிகளை செய்தனர்.
இதன்போது “என்ட வாப்பா.. என்ட வாப்பா..” என அந்த குழந்தை அழுததை காணக்கூடியதாக இருந்தது.
தன் தந்தையின் கைகளால் குண்டு தாக்குதலுக்கு இலக்காகி மரணத்தின் விளிம்பு வரை சென்று வந்த குழந்தையை அதிகாரிகள் பாதுகாப்பாக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்
0 comments:
Post a Comment