தமிழ் திரையுலகில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேல் நாயகியாக நடித்து வரும் நடிகை த்ரிஷா, தற்போது இளம் நடிகைகளுக்கு இணையாக பிசியாக உள்ளார். அவர் தற்போது ஒரே நேரத்தில் நான்கு படங்களில் நடித்து வரும் நிலையில் அவற்றில் ஒரு படம் தான் 'பரமபத விளையாட்டு'.
ஆக்சன், த்ரில் படமான இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்சன்ஸ் பணியும் இறுதிக்கட்டத்தில் இருப்பதால் மிக விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் வரும் 4ஆம் தேதி முதல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மே 4ஆம் தேதி த்ரிஷாவின் பிறந்த நாள் என்பதால் அன்று முதல் த்ரிஷாவின் பரமபத விளையாட்டு ஆரம்பமாவதாக அவரது ரசிகர்கள் டுவிட்டரில் பதிவு செய்து வருகின்றனர்.
த்ரிஷா, நந்தா துரைராஜ், ஏ.எல்.அழகப்பன், வேல ராமமூர்த்தி, சாம்ஸ், இமான் அண்ணாச்சி, சோனா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை 24ஹவர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. திருஞானம் இயக்கியுள்ள இந்த படத்திற்கு அம்ரிஷ் இசையமைக்க, ஆர்.டி.ராஜசேகர் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.
0 comments:
Post a Comment