இலங்கையின் சீர்திருத்த நடவடிக்கைகள் மற்றும் உலக வங்கியின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்படும் முன்னுரிமை திட்டங்கள் தொடர்பில் இலங்கையின் முக்கியஸ்தஸ்தர்களுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் போது அடையாளம் கண்டுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.கடந்த வாரம் உலக வங்கியின் பணிப்பாளர் சபையின் 9 உறுப்பினர்கள் இலங்கைக்குமேற்கொண்ட சுற்றுப்பயணத்தின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,பிரதமர் ரணில்விக்கிரமசிங்க மற்றும் நிதி அமைச்சரை சந்தித்து கலந்துரையாடியிருந்தமைகுறிப்பிடத்தக்கது.
மேலும் உலக வங்கியின் ஒத்துழைப்புடன் இலங்கையில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திதிட்டங்களை மேம்படுத்தலே இவர்களின் வருகையின் முக்கிய நோக்கமாகவிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் நாட்டின் தற்போதைய சூழ்நிலை,புதிய சவால்களை அடையாளங் கண்டுக்கொள்ளல் இதன் முக்கிய அம்சம் என்றும் உலக வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, உலக வங்கியின் நிதி உதவியுடன் நாட்டின் பல மாவட்டங்களிலும்அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் உலக வங்கியின் அதிகாரிகள் கண்காணிப்பினைமேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment