திரைப்படத் துறையைப் பொறுத்தவரையில் பொதுவாக நடிகைகளை விட நடிகர்களுக்குத்தான் ரசிகர் மன்றங்கள் அதிகம். ஆனால், இந்த சமூக வலைத்தளக் காலத்தில் நடிகர்களை நடிகைகள் முந்தியிருக்கிறார்கள். பெரிய முன்னணி ஹீரோக்களை விட சில டிவி சீரியல் ஹீரோயின்களுக்குக் கூட சமூக வலைத்தளங்களில் ஃபாலோயர்கள் அதிகம் இருக்கிறார்கள்.தெலுங்குப் பக்கம் போனால் டிவி தொகுப்பாளர்களும் கூட அதிக ஃபாலோயர்களைப் பெற்றிருக்கிறார்கள். ஃபேஸ்புக், டிவிட்டர் இரண்டிலும் இருக்கும் நட்சத்திரங்களும் இருக்கிறார்கள். ஃபேஸ்புக் அல்லது டிவிட்டர் இவையிரண்டில் ஏதாவது ஒன்றில் மட்டும் இருக்கும் நட்சத்திரங்களும் இருக்கிறார்கள். இவை பக்கம் இன்னும் எட்டிக் கூடப் பார்க்காத நட்சத்திரங்களும் இருக்கிறார்கள்.
நடிகைகளைப் பொறுத்தவரையில் தற்போது காஜல் அகர்வாலும் ஃபேஸ்புக்கில் 2 கோடி ஃபாலோயர்கள் கிளப்பில் இணைந்துள்ளார். சில வாரங்களுக்கு முன்தான் காஜல் டிவிட்டரிலும் தனது புதிய கணக்கைத் துவக்கினார். ஃபேஸ்புக்கில் நடிகை த்ரிஷா 2 கோடியே 61 லட்சம் ஃபாலோயர்களுடன் முன்னணியில் இருக்கிறார். ஸ்ருதிஹாசன் 1 கோடியே 67 லட்சம் ஃபாலோயர்களுடனும், அனுஷ்கா 1 கோடியே 15 லட்சம் ஃபாலோயர்களுடனும், ஒரு கோடியைக் கடந்த ஃபாலோயர்களைக் கொண்ட நடிகைகளாக இருக்கிறார்கள்.தமிழில் முன்னணி நடிகர்களில் ஃபேஸ்புக்கில் குறிப்பிடத்தக்க அளவிற்கு யாரும் செயல்பாட்டில் இல்லை. தனுஷ் மட்டும் 40 லட்சம் ஃபாலோயர்களுடன் இருக்கிறார்.
0 comments:
Post a Comment