ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள கபாலி படத்தின் டீசர் ஏற்படுத்திய பரபரப்பு காரணமாக அந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், தற்போது இறுதிகட்ட பணிகளும் முடிந்துவிட்டதால் படத்தின் ஆடியோ விழாவை ஜூன் 9-ந்தேதி சென்னையில் பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளனர்.
மேலும், கபாலி பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் என்பதால் பல நிறுவனங்கள் ஆடியோவை கைப்பற்ற போட்டா போட்டியில் இறங்கியிருந்தன. ஆனால், அந்த படத்தை தயாரித்துள்ள தாணு, இதற்கு முன்பு தான் தயாரித்த கணிதன், தெறி படங்களின் ஆடியோவை திங்க் மியூசிக்கே வாங்கியிருந்ததால் அந்நிறுவனத்துக்கே கபாலி ஆடியோவும் கொடுத்துள்ளார். மேலும், முந்தைய படங்களை விட இப்படத்தின் ஆடியோ பெரிய தொகைக்கு வியாபாரமாகியிருப்பதாக கூறுகிறார்கள்.

0 comments:
Post a Comment