அட்லி இயக்கத்தில் ‘இளையதளபதி’ விஜய், சமந்தா, எமி ஜாக்சன் நடிப்பில் கடந்த ஏப்ரல் 14-ம் தேதி வெளியான தெறி திரைப்படம் வசூலில் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. குறிப்பாக விநியோகஸ்தர்களுக்கு அதிக ஷேர் கொடுத்த படம், விஜய் கேரியரில் அதிக வசூல் செய்த படம் என பல சாதனைகளை ஏற்கனவே நிகழ்த்தியது.
இந்நிலையில் சென்னையில் உள்ள பிரபல மல்டிபிளக்ஸ் திரையரங்கான எஸ்பிஐ சினிமாஸ் வளாகத்தில் ‘தெறி’ திரைப்படம் கடந்த 40 நாட்களில் 1400 காட்சிகள் திரையிடப்பட்டுள்ளன. தமிழ் சினிமாவில் இந்த சாதனையை நிகழ்த்தும் முதல் படம் தெறியே ஆகும். மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளில் சென்னையில் ரூ. 12 கோடிவரை வசூல் செய்த படமும் தெறியே ஆகும்.

0 comments:
Post a Comment