நேற்றையதினம் காலை பதினொரு மணியளவில் வெள்ளை வான் ஒன்றில் சிவில் உடையில் வந்த இனந்தெரியாதவர்கள் கிளிநொச்சி கனகபுரம் வீதியில் உள்ள தையலகம் ஒன்றிற்கு சென்று தாம் பொலிசார் என கூறியவாறு கடையை சல்லடை போட்டதாகவும் கடை உரிமையாளரின் கைத்தொலைபேசி ஆள் அடையாள அட்டை என்பவற்றை அவர்கள் பறித்து வைத்தவாறு தம்முடன் வந்த ஒருவரை கடையில் பாதுகாப்பிற்காக விட்டு சென்ற அவர்கள் மீண்டும் மூன்று மணியளவில் குறித்த கடைக்கு வந்த அவர்கள் விசாரணைக்காக நீங்கள் வர வேண்டுமென அழைத்துள்ளனர் அவரது மனைவி மற்றும் கடை ஊழியர்கள் நீங்கள் யார் உங்களை அடையாளப்படுத்திக்கொள்ள உங்கள் தொழில் அடையாள அட்டையை காட்டுமாறு கேட்டுள்ளனர் இருப்பினும் அவர்கள் அவ்வாறு காட்ட முடியாது உங்களுக்கு தேவை என்றால் கிளிநொச்சி போலீசில் சென்று முறைப்பாடு செய்யுங்கள் என்று உரத்த தொனியில் கூறியவாறு கடை உரிமையாளரான 34 வயதான ஜெயபாலன் யாழ்சன் என்பவரை அழைத்து சென்றுள்ளதாக தெரிய வருகின்றது
அவருடைய மனைவி தனது கணவர் அழைத்து செல்லப்பட்டாரா அல்லது கடத்தப்பட்டாரா என்ற தகவல் எதனையும் அறிந்திராத அவர் கிளிநொச்சி பொலிஸ் நிலையம் சென்று நடந்த வற்றை கூறியுள்ளார் தொலைபேசி மூலம் பல தொடர்புகளை எடுத்த கிளிநொச்சி பொலிசார் வவுனியா பொலிசாரின் குற்றத்தடுப்பு பிரிவினரால் உங்கள் கணவன் கடத்தப்பட்டுள்ளதாக அவரது மனைவிக்கு தகவல் தெரிவித்ததாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்
எனினும் ஒருவரை விசாரணைக்காக அழைத்து செல்வதாக இருந்தால் தமது அடையாளத்தினை உறுதிப்படுத்தி என்ன காரணத்திற்காக அழைத்து செல்கிறோம் என்ற காரணத்தை கூறியே சந்தேக நபரை அழைத்து செல்ல வேண்டும் என்று சட்டத்தில் இடம் இருந்த போதிலும் இவ்வாறு எதனையும் கூறாது அழைத்து சென்றது மக்கள் மத்தியில் ஒருவித பயத்தினை ஏற்ப்படுத்தி உள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்
0 comments:
Post a Comment