‘கள் போதைப்பொருள் என்று நிரூபிப்போருக்கு 10 கோடி சன்மானம் அளிக்கப்படும்’ என்று அறிவித்துள்ளார் கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி.
நேற்று திருப்பூரில் பேட்டியளித்த அவர், ‘ கடந்த காலத்தில் கள்ளுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த ஜெயலலிதா தற்போதைய தேர்தலில் அதுகுறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. ‘கள்’ போதைப்பொருள் என சிலர் பேசிவருகிறார்கள். ‘கள்’ போதைப்பொருள் என நிரூபிப்போருக்கு 10 கோடி சன்மானம் வழங்கப்படும்’ என அறிவித்துள்ளார்.
எல்லா கட்சிகளும் மதுவிலக்கு என்று பேசிவரும் நிலையில் ‘கள்’ பற்றி வாய்திறக்க மறுக்கின்றன. இந்நிலையில், நாம் தமிழர் கட்சி மட்டும் கள்ளை ‘தேசிய மதுபானமாக அறிவிப்போம்’ என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment