தமிழர்களின் போராட்ட வரலாற்றில் ஆயுதப் போராட்டம் கூர்மையடைவதற்கு முன்னர் அறவழிப் போராட்ட காலத்தில் இசையில் குறிப்பாக பாடல்கள் மூலம் விடுதலைப் புலிகளின் வீரவேட்கை அதிகரித்துள்ளது.
விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் கூர்மையடைந்த காலத்தில் கலைத்துறையும் வளர்ச்சிப் பரிமாணத்தில் பின்னிற்கவில்லை.
குறிப்பாக ஈழத்தின் புகழ்பூத்த உணர்ச்சிப் பாடகரான, விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் அவர்களால் பலமுறை கெளரவிக்கப்பட்ட பாடகருமான, புலத்திலும், ஈழத்திலும் அதிகளவிலான ரசிகர்களைக் கவர்ந்த பாடகருமான எஸ்.ஜே.சாந்தனின் பாடல்கள் மூலம் தமிழர்களின் போராட்டத்தின் நியாயத்தையும் எழுச்சியையும் உண்மையையும் உணர்ச்சிகரமாக வெளியில் கொண்டுவந்த பெருமையும் சாந்தன் பாடிய பாடல்களால் என்பதை யாராலும் மறக்கவோ மறுக்கவோ முடியாது.
ஈழம் மற்றும் புலம்பெயர் தேசங்களில் சாந்தனின் காந்தக் குரலுக்கென தனியான ரசிகர்களே உள்ளனர்.
இந்நிலையில் இப் பாடகர் இரண்டு கிட்னிகளும் செயலிழந்த நிலையில் நோய் வாய்ப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சாந்தனுக்கு கிட்னி மாற்றுச் சிகிச்சை மிகமிக அவசியம் என வைத்தியர்கள் தெரிவித்திருக்கும் நிலையில் புலம்பெயர் ரசிகர்களின் உதவியை வேண்டி நிற்கிறார்.
ACCOUNT
KUNARATHINAM SANTHALINGAM
8155007808
COMMERCIAL BANK
KILINOCHCHI
SANTHAN 0094 771313624
KOKILAN 0094 777922156
0 comments:
Post a Comment