சிங்களனின் இரு ஆயுத கிடங்குகள் குற்ற உணர்வுற்று தற்கொலை செய்தது

எம் அப்பாவி மக்களை கொன்றொழித்த சிங்களனின் இரு ஆயுத கிடங்குகள் குற்ற உணர்வுற்று தற்கொலை செய்தது

காமினியின் குழந்தைகளே.....!
கந்தக வாசனை கசக்கிறதா?
பராக்கிரமபாகுவின் பாலகர்களே
பொட்டாசிய நாற்றம் பொறுக்கமுடியலையா?
கொஞ்சம் முகர்ந்துதான் பாருங்களேன்....
உயிரைக் கொல்லாது என்று
உத்தரவாதம் சொல்கிறேன்..
ஒரு கால நீட்சியில்-எங்கள்
ஒட்சிசனே இதுதானே....

சேதப்பட்டதற்கே உடனடி வீட்டுத்திட்டம்?
நச்சுக் காற்றென்று நாலுநாள் விடுமுறை?
தானாக வெடித்ததற்கே தார்மீக விசாரணை?
எண்ணி ஏழு ஆண்டுகள்....
என்னதான் நடந்து கண்டோம்.......!

முள்ளிவாய்க்காலைப் பார்த்ததுண்டா...?
கொஸ்கமவை ஆயிரம் மடங்காக்கிப் பாருங்கள்
அங்கே சிதறிக்கிடக்கும் உலோகத் துண்டங்கள்தான்
இங்கே உடலங்களாக சிதைக்கப்பட்டவை
அங்கே எரிந்து கரிந்த மரங்கள்தான்
இங்கே கருக்கப்பட்ட எம் வரலாறுகள்

ஊழி ஒரு மோசமான சக்கரமென்பதை
உண்டாகிக் கொண்டிருக்கும்
உதாரணங்களைக் கொண்டேனும் உணர்ந்துகொள்ளுங்கள்!
கற்றுக்கொள்ள மறுத்த எவரையுமே
காலம் மன்னித்ததென்று
கதையில்கூட படித்ததில்லை....!

அத்தனையும் ஆட்லறிக் குண்டுகள்….!
பல்குழல் எறிகணைகள்,
பீரங்கிப் பொருத்து குண்டுகள்,
சேர்த்துவைத்த, ஆயுதக் கிடங்குகள் வெடித்துச் சிதறின!

எங்கள் நிலத்தை எரிப்பதற்காய் அள்ளிச் சேர்த்தவை இவை..!
தமிழரைக் கொன்று தள்ளுவதற்காய் சமாதானம் பேசும் சீனாவும், இந்தியாவும், பாகிஸ்தான் இன்னும் எத்தனையோ நாடுகளும் அள்ளித் தந்தவை….
ஏதோ ஒன்று நினைவுக்கு வருகிறது…. பாற்சோறு? வெடி? கருகிப் போன மனங்கள்??? ஏதோ ஏதோ…….!
தண்ணீரும் மூன்று தரம் பிழையினைப் பொறுக்கும்,,,
உண்மை தான் நாங்கள் தண்ணீரை விட கோடி முறை பொறுத்து போனவர்கள்….
பொறுமையின் சிகரங்களாக அல்ல… கோழைகளாக இருந்ததனால்…
முன்னூறு முறை பொறுத்தவர்கள் பொறை உடைத்து எழுந்தால் தவறாமா?
எம்மை அழித்த இனவாத அரசுக்கு இது போன்ற இடர் வருகையில் எங்கள் இரக்கத்தின் ஈரம் தொலைந்து வறண்டு உதட்டோரம் புன்னகைத்து நாம் குரூரமாக கணப் பொழுதேனும் எம்மையும் அறியாமல் திருப்தி காண்பவராக இருந்தாலும் …
அன்று எம் தமிழினத்தின் அழிவை பாற்சோறு அவித்து தின்று பட்டாசு கொழுத்திக் கொண்டாடிய சிங்கள மக்கள் அழிவில் குளிர் காயும் குரோதம் மட்டும் ஏனோ இன்னமும் எங்களிடம் இல்லை தான்!!!…ஐயகோ அப்பாவிச் சிங்கள மக்களுக்கு எதுவும் நிகழ கூடாதே என தான் மனம் இந்த பொழுதிலும் அடித்து கொள்கின்றது கலக்கத்தோடு …
ஏனென்றால் நாம் அன்பை உயிர் மூச்சாகக் கொண்ட தமிழர்கள்!!!
ஆனால் தமிழர்க்கு நீதி கிடைக்கும் வரை தமிழினத்தின் வலிகளை தென்னிலங்கை மக்கள் உணர சிங்கள பேரினவாதம் உணர சின்ன சின்ன உணர்த்தல் கல்விகளை காலம் இழப்புகளை பரிசாக்காமல் கற்றுக் கொடுக்க வேண்டும் என்றே மனம் ஏனோ துடிக்கிறது….!!
கொத்துக் குண்டுகளிலும் பொசுபரசு குண்டுகளிலும் எங்கள் தமிழ் உள்ளங்களின் ஈரம் கொஞ்சம் காய்ந்து தான் போனது! ஆறா வலியில் ஆறுதல் தேடும் உள்ளங்களுக்கு வலி தந்தவர்க்கு வலிக்கையில் சின்ன திருப்தி உருவாவதும் இயற்கையின் உணர்வு வெளிப்பாடே….
அவற்றையும் கடந்து என் அருமை சிங்கள சகோதர்களே..தமிழினத்தை அழித்த அரசுக்கு அழிவு வந்தாலும் … உங்களுக்கு நாம் பட்ட வலியில் துளி அளவு வலி வந்தும் உங்கள் குழந்தைகள் துடி துடித்து விடக் கூடாதென இதோ எம் தமிழர் தாய்மை உள்ளம் தவிப்பதை அறிவீரா.?
Share on Google Plus

About சாணக்கியன்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment