இலங்கையின் உள்கட்டமைப்பில் சீனா பெருமளவில் முதலீடு செய்துள்ளது. இந்நிலையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக கடும் உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்ட, தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் வடக்கு மாகாணத்தின் முன்னேற்றத்திற்கு உதவ போவதாக இலங்கைக்கான சீன தூதர் ஜி ஸியாங்லியாங் தெரிவித்துள்ளார்.
இன்று வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரேவை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “இலங்கைக்கும் வடக்கு மாகாணத்திற்கும் ‘இலங்கைக்கான சீனாவின் உதவி திட்டத்தின்’ கீழ் அனைத்து உதவிகளையும் செய்ய தயாரக உள்ளோம். வடக்கு மாகாணத்தை சேர்ந்த குழந்தைகளின் கல்வி மேம்பாட்டிற்கு உதவித்தொகை வழங்கும் திட்டமும் உள்ளது.” என்று தெரிவித்தார்.
மேலும் இலங்கையும், சீனாவும் வரலாற்று ரீதியான உறவை கொண்டுள்ளன. தற்போது உள்ள உறவை தொடர்ந்து முன்னோக்கி எடுத்துச்செல்ல வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இலங்கையும் சீனாவும் தொடர்ந்து நெருக்கமான உறவை பராமரித்து வருவது இந்தியாவிற்கு பாதகமாக அமையும் என்பது சொல்லித் தெரியவேண்டியது இல்லை.
0 comments:
Post a Comment