கிளிநொச்சி பிரதேசத்திலிருந்து பெண்களை வரவழைத்து விபச்சாரத்தில்

வுனியா மாவட்டமானது சகல வளங்களிலும் வலுப்பெற்ற மாவட்டமாகும் யுத்த காலங்களிலும் சரி அதற்கு முற்பட்ட காலங்களிலும் சரி இங்கு சீரான ஓர் வாழ்கை தரத்தினை மக்கள் கொண்டிருந்தனர். ஆனால் இன்று அது தலைகீழாக மாறியுள்ளது என்றே கூறவேண்டும்.
இளைஞர்கள் தொடங்கி முதியோர்கள் வரை போதைக்கும் பல்வேறுபட்ட சமூக விரோத செயல்களுக்கும் அடிமைகளாக மாறி வருகின்றதை அவதானிக்க கூடியதாக உள்ளது. இதற்கு காரணம் என்ன? இதன் பின்னணியில் யாரேனும் உள்ளார்களா?? என்ற ஐயப்பாடு அனைவர் மத்தியிலும் காணப்படுகின்றது.
வவுனியா வேப்பங்குளம் எட்டாம் ஒழுங்கையில் ஊர்மிளாகோட்டம் எனும் சிறிய கிராமம் அமைந்துள்ளது.
இக்கிராமத்தில் பொதுவாக வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களே வாழ்ந்து வருகின்றனர். ஆனால் இங்கு அதிர்ச்சியூட்டும் சீர்கேடுகள் நடைபெற்று வருகின்றன.
இக்கிராமத்தில் குறிப்பிட்ட சில நபர்கள் சமூக சீர்கேடான செயல்களில் ஈடுபடுகின்றனர்.
ஆம் விபச்சாரம், கசிப்பு வடித்தல், கஞ்சா வியாபாரம் போன்ற சமூக சீர்கேட்டு வியாபாரங்கள் இடம்பெறுகின்றமை தெரிய வந்துள்ளது. இவர்களின் பின்னனியில் யார் உள்ளார்கள் இவர்களை யாரும் வழிநடாத்துகிறார்களா?? என்பது புரியவில்லை.
கிளிநொச்சி பிரதேசத்திலிருந்து பெண்களை வரவழைத்து விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதாகவும் அறியப்படுகிறது. இச் சீர்கேடுகளில் ஈடுபட்டிருக்கும் சிலரது தரகர்களும் அக்கிராமத்தை சுற்றியுள்ள பிரதேசங்களில் அலைந்து திரிகிறார்கள் அவர்களுக்கு தரகு கூலியாக ஒரு நபருக்கு ரூபா 500 கொடுக்கப்படுவதாக ஒரு தரகரே குறிப்பிட்டுள்ளார். அத்துடன் பெண்கள் வெவ்வேறு பிரதேசங்களில் இருப்பதாகவும் முன்பதிவு செய்யப்பட்டு சிறிது நேரத்தின் பின்பே பெண் அழைத்துவரப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளான். இதேவேளை இங்கு அமைந்துள்ள மசாஜ் நிலையத்திலும் விபச்சாரம் இடம்பெறுவதாகவும் நன்கு அறிந்தவர்களுக்கு மாத்திரமே பெண்களை வழங்கிவருவதாகவும் தெரிவித்தார்.
பொதுவாக இவ்வாறான சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் பெரும் பண முதலைகளாக இருக்க வேண்டும் அல்லது யாராவது பலமிக்க பின்னணி இருக்கும் நபர்களே துணிந்து இவ்வாறான செயல்களில் ஈடுபட முடியும் என்ற பொதுவான கருத்துக்கள் உள்ளது. அவ்வாறானால் வறுமைகோட்டிற்கு கீழ் வாழும் மேற்குறிப்பிட்ட கிராமத்திலிருந்து சிலர் எவ்வாறு இத் துணிகர செயலில் இறங்கினார்கள்???
அக்கிராமத்தில் வசிக்கும் அனைவருமே அறிந்த விடயம் இங்கு கஞ்சா வியாபாரம் மற்றும் விபச்சாரமும் கசிப்பு வடித்தலும் நடைபெறுகிறது என. ஆனால் இதில்ஈடுபடுபவர்களின் பின்புலத்தில் யார் உள்ளார்கள் என்ற அச்சத்தில் ஏனைய மக்கள் இது சம்பந்தமாக யாரிடமும் முறைப்பாடு செய்யவில்லை ஆனாலும் முழு ஊர் அறிந்த இவ்விடயம் ஏன் காவல் துறை அறியவில்லையா? அரசியல்வாதிகளும் இதை அறியவில்லையா? என்பது கேள்விக்குறியாக உள்ளது!
இதேவேளை விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படும் பெண்கள் யார்? அச்சுறுத்தலுக்குள்ளாகி இத்தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றனரா? அல்லது அவர்களின் வறுமையை வைத்து தயா போன்ற சமூக விரோதிகளால் விரிக்கப்படும் வலைகளில் சிக்குகின்றனரா?? என்பது அக்கிராம மக்களினது விடைதெரியா கேள்வியாகவே உள்ளது!
இவ்வாறான சமூக விரோத கும்பல்களை வெளி உலகிற்கு கொண்டுவந்து தண்டனை பெற்றுக்கொடுக்கும் கடமை அக்கிராம மக்களுக்கும் விபரம் அறிந்தவரகளுக்கும் உள்ளது உங்களால் மாத்திரமே இவற்றை கட்டுப்படுத்த முடியும் என்பதை அனைவரும் மனதில் வைத்து செயற்படவேண்டிய கோட்பாடு ஒன்று உள்ளது என்பது சுட்டிக்காட்ட வேண்டியதொன்றாகும்.
Share on Google Plus

About சாணக்கியன்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment