யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரி 20 வருடங்களின் பின்னர் நேற்றிலிருந்து மீளவும் சொந்த இடத்தில் இயங்க ஆரம்பித்துள்ளது.
கடந்த காலத்தில் இடம்பெற்ற போர் நடவடிக்கைகள் காரணமாக நடேஸ்வரா கல்லூரி இராணுவத்தின் உயர்பாதுகாப்பு வலையத்துள் இருந்தது. ஆட்சி மாற்றத்தின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ள குறித்த கல்லூரியின் மீள் திறப்பு விழா நேற்று வலிகாமம் வலயக் கல்வி பணிப்பாளர் சந்திரராஜா தலைமையில் இடம்பெற்றது.
இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, வடமாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா மற்றும் கல்வி துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கடந்த மார்ச் மாதம் 12 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறித்த பாடசாலையை அதன் நிர்வாகத்திடம் கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment