கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியில் பாலம் அமைப்பதற்காக வீதியில் வெட்டப்பட்ட குழியில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் விழுந்து பலத்த காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி உருத்திரபுரம் வீதியில் பாலங்கள் அமைப்பதற்கு வெட்டப்பட்ட இடத்தில் சமிக்ஞைகள் எதுவும் அற்ற நிலையில் கணப்படுவதால் இந்த வீதியின் ஊடாக பயணிக்கும் மக்கள் பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
இவ்வாறான நடவடிக்கை அதிகாரிகளின் அசமந்தப் போக்கையே எடுத்துக்காட்டுகிறது.
அலட்சியப் போக்குடன் செயற்படும் அதிகாரிகளுக்கு உயர் அதிகாரிகள் உடந்தையாக இருக்கிறார்கள் என்றும் பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment