கொஸ்கம இராணுவ முகாமில் ஆயுத களஞ்சியசாலையில் திடீரென தீ பரவல்!

கொஸ்கம
-சாலாவ இராணுவ முகாமில் திடீர் தீப்பரவல் சம்பவம் ஒன்று சற்று முன்னர் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தீயுடன் பாரிய வெடிப்பு சத்தமும் கேட்டதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக அவிசாவளை – கொழும்பு பிரதான பாதை, கொஸ்கம பிரதேசத்தில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
அத்துடன் தீ சம்பவத்தை பார்வையிட குறித்த பிரதேசத்திற்கு பொதுமக்கள் வருவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கொஸ்கம இராணுவ முகாமில் ஏற்பட்ட தீ விபத்தினால் அதனைச் சூழ 8 மீற்றர் தூரத்தில் வசிப்போரை அந்த இடங்களிலிருந்து அகன்று செல்லுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த ஆயுத களஞ்சியசாலையில் ஏற்பட்டுள்ள தீவிபத்தினால் ஒரு புறம் கலுஅக்கல வரையும் மறுபுறம் அவிஸ்ஸாவலை வரை வெடிப்புச் சத்தங்கள் கேட்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை இந்த வெடிப்பு சம்பவத்தினால் இராணுவத்தினர் எவருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்று மேஜர் ஜெனரல் சுனந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை தீயைக் கட்டுப்படுத்த இராணுவத்தின் பெல் வர்க்க விமானம் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் முப்படையினரும்,தீயணைப்பு படையிரும் தீயைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும்,அந்தப் பிரதேசத்தைச் சூழவுள்ள அனைத்து வைத்தியசாலைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த வெடிப்பு சம்பவத்தின் சத்தமானது 50 கிலோமீற்றர தூரத்தில் உள்ள தெரணியகல நூரி தோட்டம் வரை கேட்டதாகவும், வெளிவரும் புகை,வெளிச்சங்களைக் கொண்டு கொஸ்கம பிரதேசத்தை பார்க்க கூடியதாகவுள்ளதாகவும் இந்த பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் இந்தப் பிரதேசத்துக்கான போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தீயினை அடுத்து சிதறி விழும் பொருட்கள்
கொஸ்கம இராணுவ முகாமில் ஏற்பட்டுள்ள தீவிபத்தினால் 10 கிலோ மீற்றருக்கு அப்பால் உள்ள பிரதேசங்களுக்கும் பொருட்கள் சிதறி விழுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹங்வெல, அவிஸ்ஸாவளை பிரதேசங்களுக்கே குறித்த தீயினால் பொருட்கள் சிதறி விழுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அவிஸ்ஸாவளை வைத்தியசாலைக்கும் பொருட்கள் வந்து விழுவதால் நோயாளிகளை இடமாற்றியுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அத்துடன் குறித்த பகுதியில் வசிக்கும் மக்களை அப்புறப்படுத்தும் வேலையை பொலிஸார் முன்னெடுத்துள்ளதாக பதில் பொலிஸ்மா அதிபர் எஸ்.எம்.விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை குறித்த தீயினால் பாதிக்கப்படும் பொதுமக்கள் மற்றும் இராணுவத்தினரை மீட்பதற்காக சுகாதார பணிப்பாளர் பாலித மஹிபாலவின் அறிவுறுத்தலுக்கமைய 20 அம்யூலன்ஸ் வண்டிகள் அவிஸ்ஸாவளை வைத்தியசாலையிலிருந்து அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இரத்தினபுரி, கொழும்பு, கரவனெல்ல, பாதுக்க, வதுபிட்டிவல, கம்பஹா, ராகம உள்ளிட்ட வைத்தியசாலைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் குறித்த இடத்திற்கு சாகல ரத்னாயக்க உள்ளிட்ட பல அரசியல்வாதிகள் நேரடியாக சென்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவிசாவளை தேர்தல் தொகுதியின் பாடசாலைகள் அரச நிறுவனங்கள் அனைத்தும் மூடப்படும்
கொஸ்கம இராணுவ முகாம் தீப்பரவல் சம்பவத்தை அடுத்து அந்தப்பகுதியில் இருந்துவெளியேறியுள்ள மக்களின் உடமைகளை பாதுகாக்க விசேட திட்டம் அமுல் செய்யப்பட்டுள்ளதாகஇராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் அவசர நிலைமையை கருத்திற்கொண்டு நாளை அவிசாவளை தேர்தல் தொகுதியின்பாடசாலைகள் அரச நிறுவனங்கள் அனைத்தும் மூடப்படும் என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவுதெரிவித்துள்ளது.
Share on Google Plus

About சாணக்கியன்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment