நயன்தாரா ஏற்கனவே ‘மாயா’ என்ற திகில் படத்தில் நடித்தார். அது, ஒரு பேய் படம். அதில் பேயாகவும், அந்த பேயின் மகளாகவும் அவர் இரண்டு விதமான தோற்றங்களில் வந்தார். அஸ்வின் சரவணன் டைரக்டு செய்திருந்தார். படம் வெற்றிகரமாக ஓடி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து நயன்தாரா மீண்டும் ஒரு திகில் படத்தில் நடிக்க சம்மதித்து இருக்கிறார். இதில், ஹரீஷ் உத்தமன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தை தாஸ் டைரக்டு செய்கிறார். அனிருத் இசையமைக்கிறார். சற்குணம் தயாரிக்கிறார்.
0 comments:
Post a Comment