கவுதம் வாசுதேவ் மேனன் டைரக்ஷனில் சிம்பு நடித்து வரும் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் மூலம் மஞ்சிமா மோகன் கதாநாயகியாக அறிமுகமாகிறார். அந்த படம் திரைக்கு வருவதற்குள், இவருக்கு பல புது பட வாய்ப்புகள் வந்து குவிகின்றன.
லிங்குசாமி டைரக்ஷனில் விஷால் நடிக்கும் ‘சண்டக்கோழி–2’ படத்தில், விஷால் ஜோடியாக மஞ்சிமா மோகன் நடிக்கிறார். இதேபோல் விஷ்ணு விஷால் ஜோடியாகவும் ஒரு புதிய படத்தில் நடிக்க இவர் ஒப்பந்தமாகி இருக்கிறார்.
0 comments:
Post a Comment