சர்வதேச தரத்தில் யாழ்ப்பாணத்தில் கிரிக்கட் மைதானமொன்று அமைக்கப்பட உள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கட்டின் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண குடாநாட்டில் சுமார் 400 மில்லியன் ரூபா செலவில் மைதானம் அமைக்கப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆண்டு நவம்பர் மாதமளவில் யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கட் மைதானம் அமைக்கும் பணிகள் ஆரம்பமாகும் என தெரிவித்துள்ளார்.
மூன்று ஆண்டுகளில் மைதானம் அமைக்கும் பணிகள் பூர்த்தியாகும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
50 ஏக்கர் பரப்பில் இந்த மைதானம் அமைக்கப்பட உள்ளதாகவும் யாழ்ப்பாணத்தில் எந்த பகுதியில் அமைப்பது என்பது குறித்து இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment