ஒவ்வொரு ராசிக்கும் ஒருசில அடிப்படை குணாதிசயங்கள் பொதுவாக இருக்கும் என ஜோதிட நிபுணர்கள் கூறுகின்றனர். இது ஒருசிலர் மத்தியில் வேறுப்பட்டு கூட போகலாம். இதன் அடிப்படையில் பார்க்கும் போது இரண்டு ராசிகளின் குணாதிசயங்கள் ஒன்றாக சேரும் போது அங்கு நன்மை, தீமை இரண்டும் உண்டாகும் வாய்ப்புகள் இருக்கின்றன. ஏறத்தாழ இது கணிதத்தை போல தான். ஒருசில தியரிகள் பொருந்தும், ஒருசில தியரிகள் பொருந்தாது. இந்த வகையில் ஒருசில ராசிகள் ஒன்றிணைந்தால் அவர்கள் இயல்பாகவே மகிழ்ச்சியாக இருப்பார்கள், ஒருசில ராசிகள் முன்னுக்குப்பின் முரணாக இருப்பார்கள். இதில் இல்லற பந்தத்தில் ஒருவருக்கு ஒருவர் ஒத்துப்போகாத ராசிகள் எவையென இனிப் பார்க்கலாம்
சிம்மம், கன்னி
இவர்களுக்கு மத்தியில் கவர்ச்சியின் பாலான ஈர்ப்பு தான் அதிகமாக இருக்கும். தொடக்கத்தில் இவர்களது இல்லறம் மகிழ்ச்சியாக கழிந்தாலும் போக, போக சிம்மத்தின் ஆதிக்கம் அதிகரிக்கும். இதனால் உறவில் மனவுளைச்சல் அதிகரித்து பிரிந்துவிட நினைப்பார்கள்.
மேஷம், விருச்சிகம்
இருவருமே பலமிக்கவர்கள், கட்டுப்பாடுடன் இருக்கக் கூடியவர்கள், தலைமை வகிக்க விரும்புவார்கள். விருச்சிகம் பொதுவாகவே சற்று பொறாமைப்படும், மேஷம் ஏமாற்றும் குணம் கொண்டிருக்கும். இவர்களுக்குள் விட்டுக் கொடுக்கும் பண்பு இல்லாவிட்டால் உறவில் விரிசல் அதிகரிக்கும்.
ரிஷபம், கும்பம்
இந்த இரண்டு ராசிகளுமே சுத்தமாக பொருந்தாதவை என கூறப்படுகிறது. ரிஷபம் காதல், அன்பு, அழகு, பொறுமை பண்புகள் கொண்டிருக்கும். கும்பம் எதிர்பாராத விஷயங்களை செய்யும் பண்பு கொண்டது. ரிஷபம் விட்டுக்கொடுத்து வந்தாலும் கும்பம் ஏற்றுக்கொள்ளும் முனைப்பில் இருக்காது.
மிதுனம், கடகம்
இவர்கள் மிகவும் சாந்தமான வாழ்க்கையை எதிர்பார்ப்பவர்கள். இருவருக்குமே நகைச்சுவை குணம் அதிகமாக இருக்கும். மிதுனம் பொறுமையாக இருக்க வேண்டும், பாதுகாப்பளிக்க வேண்டும். கடகம் பதிலுக்கு காதலை மிகுதியாக அளித்தால் இவர்களுக்குள் எந்த பிரச்சனையும் வராது.
தனுசு, மகரம்
இவர்களுக்குள் தாம்பத்தியம் தான் பெரிய பிரச்சனையாக இருக்கும். இல்லறம் பற்றிய திட்டமிடுதலில் குழப்பங்கள் ஏற்படும். இந்த இரண்டையும் இவர்கள் சரி செய்துக் கொண்டால் இல்லறம் சிறக்கும்.
கன்னி, மிதுனம்
இந்த இராசிகளுக்குள் பணம் ஓர் பெரிய பிரச்சனையாக இருக்கும். மிதுனம் காதலை மட்டும் போதுமானது என முனையும். ஆனால், கன்னி நாளைக்கான சேமிப்பு அவசியம் என கருதும் குணம் கொண்டிருக்கும். இந்த காரணத்தினாலேயே உறவில் விரிசல் உண்டாகும்.
மீனம் மற்றும் சிம்மம்
ஆரம்பத்தில் இந்த ஜோடி மிகவும் காதலுடன் கொஞ்சிக் குலாவிக் கொள்ளும். ஆனால், நாள்ப்பட இவர்களது உறவில் மோகம் குறையும் போது பிரிவு அதிகரிக்க ஆரம்பிக்கும். சிம்மத்தின் பேரார்வத்தை மீனம் கண்டுக் கொள்ளாமல் போகும் தான் பிரச்சனை அதிகரிக்கும்.
மிதுனம், விருச்சிகம்
இருவருமே வெளிப்படையாக பேச மாட்டார்கள். இவர்கள் மனம் விட்டு பேச நேரத்தை ஒதுக்காமல் இருக்கும் வரை உறவில் ஓர் பற்று இருக்காது. இதனால், இவர்கள் மத்தியிலான இடைவேளையும், மன வருத்தம் தான் அதிகரிக்கும்.
கும்பம், கடகம்
கும்பம் எதிர்பார்க்கும் சுதந்திரத்தை கடகம் தந்து தான் ஆகவேண்டும். இருவரும் பாதுகாப்பாக உணர வேண்டும். ஆனால், இவர்கள் மத்தியில் எழும் நம்பகத்தன்மை குறைபாடு தான் இவர்களது உறவை சீர்கெடுத்துவிடும்.
துலாம், மீனம்
இருவருக்குள் உண்டாகும் பிரச்சனையை கையாள தெரியாமல் பெரிதாக்கிவிடுவார்கள். இதுவே இவர்களது உறவை பாழாக்கிவிடும்.
சிம்மம், ரிஷபம்
இவர்கள் இருவரும் மத்தியிலும் பெரியளவில் எதிர்பார்ப்பு இருக்கும். உடலளவில், மனதளவில் ஒவ்வொரு நாளும் ஒரேமாதிரியான நிலையை எதிர்பார்பார்கள். தங்கள் மீதே அதிக பெருமிதம் கொள்வார்கள், மற்றவரிடம் மன்னிப்பு கேட்க மாட்டார்கள். இது மனதில் காயங்கள் ஏற்படுத்தும், நாள்பட உறவில் விரிசலை அதிகரிக்கும்.
மேஷம், கடகம்
இவர்கள் இருவரும் சிறந்த ஜோடியாக திகழ முடியும். உணர்ச்சி ரீதியாக இருவருமே சிறந்து விளங்கக் கூடியவர்கள். ஆனால், மேஷம் உலகம் சுற்ற விரும்பும், வெளியிடங்களுக்கு சென்று வர அலைபாயும். ஆனால், கடகம் வீட்டினுள்ளே சமைத்து சாப்பிட்டுவிட்டு உறங்க யோசிக்கும். சரியான அக்கறையின்மை, புரிதல் இல்லாமல் இருப்பது இவர்களது உறவில் விரிசலை அதிகப்படுத்தும்.
0 comments:
Post a Comment