நேற்று முன் தினம் (8.8.2015) காலை 6.30 மணியளவில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், கிராமத்தில் இருந்து வந்திருக்கும் ஒரு தாயும் மகளும், அண்ணா அரங்கத்திற்கு வழிகேட்டபடி நின்றுள்ளனர். 8.30 மணிக்கு துவங்க இருக்கும் பி.எஸ்.சி அக்ரிகல்ச்சர் படிப்பிற்கான கவுன்சிலிங்கில்கலந்துகொள்வதற்காக, திருச்சிக்கு அருகேயுள்ள சிறு கிராமத்தில் இருந்து வந்திருப்பதாக கூறியுள்ளனர்.
ஆனால் விவசாயக் கூலியான படிக்காத அந்த தாய்க்கும், அந்த சிறுமிக்கும், அந்த படிப்பிற்கான கலந்தாய்வு கோயம்புத்தூரில் நடக்கிறது என்பது தெரிந்திருக்கவில்லை. ஏதோ தவறான தகவலின்படி சென்னைக்கு வந்துவிட்டனர். காலையில் அங்கே நடைப்பயிற்சி செல்பவர்கள் சிலர் இந்த விவரங்களை கேட்டறிந்து, கலந்தாய்வு நடப்பது கோயம்புத்தூரில் என்ற விவரத்தைக் கூறியிருக்கின்றனர்.
ப்ளஸ் டூ தேர்வுகளின் போது உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட நிலையிலும் அந்தப் பெண் 1017 மதிப்பெண்கள் எடுத்திருக்கிறாள். இந்த விவரங்களை கேட்டறிந்த நடைப்பயிற்சிக்கு வந்த ஒருவர், அவர்கள் இருவரையும் விமானம் மூலம் கோயம்புத்தூருக்கு அனுப்பும் செலவை தான் ஏற்றுக்கொள்வதாகசொல்லியிருக்கிறார். அங்கிருந்த மற்றவர்கள், கோயம்புத்தூரில் இருக்கும் தங்கள் நண்பர்கள் மூலம், கலந்தாய்வில் இருக்கும் ரெஜிஸ்ட்டாரிடம் இந்த நிலைமையை எடுத்துச் சொல்லியிருக்கின்றனர். பின் தாய்க்கும் மகளுக்கும் காலை உணவு ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டிருக்கிறது.
விமான பயண செலவை ஏற்பதாக சொன்னவர், காலை 8.15 மணியளவில் விமான நிலையத்திற்கு புறப்பட்டு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்திருக்கிறார். தாயும் மகளும் காலை 10.05 க்கு புறப்படும் கோயம்பத்தூர் விமானத்தை பிடித்துள்ளனர். 11.40 மணிக்கு விமானம் கோயம்புத்தூரில்தரையிறங்கியிருக்கிறது. அங்கிருந்து இருவரையும் கலந்தாய்வு நடக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்ல சென்னையை சேர்ந்தவர்களின் நண்பர்கள் தயாராக இருந்திருக்கின்றனர். இருவரையும் மதியம் 12.15 மணிக்கு கவுன்சிலிங் நடைபெறும் இடத்திற்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர்.
அங்குள்ள ரெஜிஸ்டார் அந்தப் பெண் கலந்தாய்வில் கலந்துகொள்வதற்காக முறையான ஏற்பாடுகளை செய்துகொடுத்திருக்கிறார். அதன்பின் கவுன்சிலிங்கில் கலந்துகொண்ட அந்த பெண்ணுக்கு கோயம்புத்தூர் அக்ரிக்கல்ச்சர் யுனிவர்சிட்டியில் பயோடெக்னாலஜி படிப்பதற்கான இடம் அன்று மதியமே 2 மணியளவில் கிடைத்திருக்கிறது.
மனிதர்களால் அல்ல, மனிதத்தாலேயே இயங்குகிறது உலகம்
இன்னும் மிச்சமிருக்கிறது மனிதம் !!!
0 comments:
Post a Comment