பலவருடங்கலாக இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் 2009ஆம் ஆண்டு மே 18ஆம் திகதி முடிவிற்கு வந்துள்ளது. அப்பொழுது விடுதலைப் புலிகளின் அமைப்பின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்தது.
இந்த நிலையில் பிரபாகரனின் உயிரிழப்பு தொடர்பாக பல சர்ச்சைகள் எழுந்தது, தற்பொழுதும் எழுகின்றது. உண்மையில் பிரபாகரன் உயிரிழந்து விட்டாரா? இல்லையா? என்பது பொதுமக்களிடையே காணப்படும் கேள்வியாக உள்ளது.
இந்த நிலையில் கடந்த 5ஆம் திகதி தமிழக முதலமைச்சர் புரட்சித் தலைவி ஜெ.ஜெயலலிதா மாரடைப்பு காரணமாக சென்னையில் உயிரிழந்துள்ளார். குறித்த இரண்டு புரட்சித் தலைவர்களின் இறப்புக்களும் தமிழ் மக்கள் மத்தியில் இறந்துவிட்டாரா? இல்லையா என்னும் கேள்விகளை எழுப்பியுள்ளது.
எனினும் ஜெயலலிதாவின் இறப்பு பொது மக்கள் மத்தியில் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் உயிரிழப்பு தொடர்பாக பொதுமக்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்த நிலையில் 2009ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இறுதி யுத்தத்தில் இறந்து விட்டதாகவும் அவரின் இறந்த உடலை இலங்கை இராணுவத்தினர் கைப்பற்றியதாகவும் புகைப்டங்களுடன் செய்திகள் வெளியாகியுள்ளது.
கடந்த 2009மே 17ஆம் திகதி இரவு விடுதலைப் புலிகளின் தாக்குதல் படையணியுடன் குறிப்பாக கரும்புகள் அணியுடன் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் முள்ளிவாய்க்காளில் இருந்து நந்திக்கடல் ஊடக கேப்பாப்புலவு என்னும் கிராமத்தை நோக்கி போர்படகுகளில் நகர்ந்து அதி உச்ச சமர்களத்தை சந்தித்தார் என்று பாதுகாப்பு படைப்பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் 18ஆம் திகதி காலையில் பிரபாகரனின் இறந்த சடலத்தை இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையின் வடக்கு கிழக்கை தாயகமாக கொண்டு ஒரு நாட்டில் இருக்க வேண்டிய நிர்வாகத்தை அமைத்து ஆட்சி செய்த விடுதலைப் புலிகளின் அமைப்பின் தலைவர் பிரபாகரன் அனைத்தையும் இழந்து வாழ்வா? சாவா என்னும் முடிவுடன் நந்திக்கடலை கடந்திருக்கலாம். அது மட்டுமல்ல அவரின் உயிரிழப்புக்கு முதல் நாள் இரவு முழுவதும் விழித்திருந்திருக்கக் கூடும் .
அத்தோடு சம்பவ இ
டம் உப்புநீர் பிரதேசமாக காணப்பட்டது.
இவ்வாறான சூழலில் இறந்த உடலாக காட்டப்பட்ட பிரபாகரனின் முகம் பொலிவுடன் ஒரு உயிரோட்டமாக காணப்பட்டது எப்படி?
கடந்த 75 நாட்கள் மருத்துவமனையில் நோய் பாதிப்பில் உயிரிழந்தவர் போலவே ஜெயலலிதாவின் முகம் காணப்படவில்லை.
சட்டசபையில் பார்க்கும் போது காணப்படும் அதே பொலிவுடன் காணப்பட்டதுதான் பலரையும் ஆச்சரியத்தில் ஏற்படுத்தியது.
இதற்கு காரணம் “எம்பார்மிங்” எனப்படும் சின்ன டச்சிங் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் எது உண்மை? உண்மையில் என்னதான் நடந்திருக்கும் எனபது சமூக ஆர்வலளர்களிடத்தில் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
0 comments:
Post a Comment