அமெரிக்காவை எதிர்க்கும் தமிழர்கள் - மீண்டும் தமிழன் உலகை ஆள்வது நிச்சயிக்கப்பட்டு விட்டதா!!

எங்கோ நிகழும் ஓர் வண்ணத்துப்பூச்சியின் சிறகசைப்பு உலகின் மற்றொரு இடத்தில் ஓர் புயலை ஏற்படுத்தலாம். ஓர் நிகழ்வின் போக்கும் தாக்கமும், அதன் ஆரம்ப கணத்தின் நுண்ணிய நிகழ்வுகளைச் சார்ந்துள்ளது. இது அறிவியலில் ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயம் இதுவே பட்டாம் பூச்சி விளைவு.

இப்போதைய உலகை உற்று நோக்குகையில் தமிழர் மீண்டும் உலகை ஆளப்போகின்றார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இந்தக் கூற்றுக்கு மெய்ப்பிக்கப்போவது தமிழரின் எழுச்சி.

வல்லரசுகளுக்கு எல்லாம் வல்லரசான அமெரிக்காவிற்கு எதிராக தமிழன் போர்கொடிகளைத் தூக்கிவிட்டான் இன்றைய நாளில். வியப்பு இந்தச் செயற்பாடு, தமிழர்களின் எழுச்சி கொடுக்கப்போகும் விடை என்ன?

அமெரிக்காவின் அதிபர் பதவி ஏற்பார் என்பது 500 வருடங்களுக்கு முன்னர் கணிக்கப்பட்ட விடயம். சொன்னது நோஸ்ராடாமஸ் எனும் தீர்க்கதரிசி.

இவர் இது மட்டுமல்ல பலவற்றை சொன்னார் அவை அப்படியே நிறைவேறியது. ஆனால் ஆச்சரியம் மிக்க அவருடைய ஓர் கணிப்பே ட்ரம்ப் பதவி ஏற்றதன் பின்னர் உலகை ஆண்ட ஓர் இனம் மீண்டும் உலகை ஆளத் தொடங்கும் என்பது.

ஆம் வியக்கத்தக்க வகையில் அது நிறைவேறப்போகின்றதா? உலகை ஆண்ட ஓர் இனம் தமிழ் இனம். இதனை மறுப்பவர் எவறேனும் உண்டா?

வீரம் அவன் உடைமை, இடுப்பில் தொங்கும் அவன் வாளுக்கு வெள்ளையர்களும் அடி பணிந்தார்கள் ஒரு காலத்தில். புலமை அவன் சொத்து, திமிர் அவன் பாண்டித்தியம் இப்படி பல்வேறு சிறப்புகளை பெற்ற தனி இனம் தமிழினம்.

இப்படியாக முழு உலகையும் ஆண்ட ஓர் இனமே தமிழ் இனம் என்பதை எவராலும் மறுக்க முடியாது.

இப்போது ட்ரம்ப் பதவி ஏற்கும் அதே சமயம் முழு உலகத்தையும் உழுக்கும் வகையில் தமிழர்கள் ஒன்று சேர கிளர்ந்து எழுந்துள்ளார்கள்.

சாதாரண ஜல்லிக்கட்டுக்காக என்று எவராலும் இதனை ஒதுக்கித் தள்ளி விட முடியாது. குறிப்பாக நோஸ்ராடாமஸ் கூறியது ஆண்ட இனம் அதாவது அவருடைய காலத்திற்கு முதல் ஆண்ட இனம்.

அப்படி பார்க்கும் போது குமரிக் கண்டம் தொடக்கம் ஒட்டுமொத்த உலகையும் ஆண்ட ஒரே இனம் தமிழரே. அந்த இனத்தையே அவர் குறிப்பிட்டுள்ளாரா?

இன்றை நாளில் ட்ரம்ப் பதவி ஏற்கும் அதே சமயம் மெரினாவில் எழுந்த தமிழர்களின் அலை முழு உலகிலும் எதிரொலிக்கின்றது. இந்த எழுச்சி இன்றும் அடக்கப்பட வில்லை.

ட்ரம்பின் பதவியேற்புக்கும் பீட்டாவிற்கும் என்ன தொடர்பு? அதற்கும் தமிழன் உலகை ஆளுவான் என்பதற்கும் என்ன தொடர்பு?

இங்கு மீண்டும் ஒன்றை நினைவு படுத்திக் கொள்கின்றேன் நோஸ்ராடாமஸ் கூறிய அனைத்தும் நிறைவேறி வருகின்றன. இதில் அறிவியல் விஞ்ஞானம் எதனையும் தேட வில்லை சொன்னது பலித்து விட்டது அது மட்டுமே.

அதேபோல் இப்போது ஜல்லிக்கட்டுக்கு எதிராக எழுந்த தமிழர்களின் எழுச்சி ஒரு வகையில் அமெரிக்காவிற்கே எதிராக வெளிவந்த கிளர்ச்சியே.

ஜல்லிக்கட்டுக்கு எதிராக வந்த கிளர்ச்சி கடைசியில் அமெரிக்காவிற்கும் எதிராக மாறிப்போனது. இந்த போராட்டத்தின் விளைவு தமிழகத்தில் அமெரிக்க பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு விட்டது.

அமெரிக்க தனது நிறுவனங்களும் பொருட்களும் இடையூறாக செயற்பட்டு பொருளாதாரத்தில் அமெரிக்கா டொலரில் கைவைக்கும் எவரையும் விட்டுவைக்காது.

உதாரணமாக டொலருக்கு பதில் தங்கம் கேட்டதால் லிபியா அழிக்கப்பட்டது, கடாபி சுட்டுக் கொல்லப்பட்டார், சதாம் உசைன் தூக்கிலிடப்பட்டார்.

அவ்வளவு ஏன் அமெரிக்காவை ஒதுக்கியதாலேயே தமிழீழ விடுதலைப்புலிகளை அழிக்க அமெரிக்காவும் சதி செய்தது.

இப்படி பல ஆதாரங்கள் உண்டு குமரிக்கண்டத்தை ஆண்ட தமிழன் மீண்டும் எழுச்சி பெற்று விடக் கூடாது என்பதில் சர்வதேசம் மிக ஆழமாக உற்று நோக்கிக் கொண்டே இருக்கும்.

வெளிப்படையாக அது தெரியாவிட்டாலும் தமிழனின் அடையாளங்கள் இப்போது மிச்சம் இருக்கின்றதா என சற்று மீட்டுப் பாருங்கள் உண்மைகள் புரியும்.

சரி இதனையும் தாண்டி இன்று அமெரிக்காவிலேயே தமிழர்கள் போராடத் தொடங்கிவிட்டார்கள். இப்போது தமிழர்கள் அமெரிக்காவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கி விட்டார்கள்.

தமிழீழம் அழிக்கப்பட்டு விட்டது இங்கு தமிழீழம் என்பதைத் தாண்டி தமிழர்கள் என கூறலாம்.

இப்போது தமிழகம் குறிவைக்கப்பட்டுள்ளது. தமிழர் கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம் அனைத்தையும் அழிக்க திட்டமிடப்படுகின்றது.

நோஸ்ராடாமஸ் கூறியதைத் தாண்டியும் தற்போதைய நிலையில் அழிக்கப்பட்டு, அடக்கப்பட்டு ஒடுக்கப்பட்ட தமிழ் இனம் மீண்டும் உலகை ஆளப்போகின்றதா?

அதற்கான ஆயத்தம் உலக வல்லரசுகளையும் ஆட்டம் காண வைக்கும் அமெரிக்காவுடனேயே தமிழர்கள் பகைமையை வெளிப்படுத்த தொடங்கி விட்டனர்.

அதன் படி தமிழன் மீண்டும் உலகை ஆளத் தொடங்கி விட்டான் என்பது தமிழ் ஆய்வாளர்களின் கூற்று.

மூன்றாம் உலகப்போரை துவக்கி வைப்பதற்கு காரணமாக இருப்பது டிரம்ப் என்பது நோஸ்ராடாமஸ் கணிப்பு. அதுவும் அணுகுண்டு போரை டிரம்ப் ஆரம்பித்து வைப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.

இப்படியான போர்களுக்கு இப்போது தொடக்கப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது. ஆனால் வெற்றி பெறப்போவது தமிழ் இனமா? உலகை ஆண்ட தமிழன் இப்போது மீண்டும் வருவானா? பொறுத்திருந்து பார்ப்போம்.
Share on Google Plus

About சாணக்கியன்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment