கிழக்கு பல்கலைக்கழக்தில் கடந்த நான்கு நாட்களாக நிர்வாக கட்டடத்தை முற்றுகையிட்டுள்ள மாணவர்களை வெளியேற்றாமல் முதலாம் வருட மாணவர்களை வெளியேற்றுவதற்கு மாத்திரம் கிழக்கு பல்கலையின் பேரவையின் சட்டத்தினால் முடிந்துள்ளது என கிழக்கு மாகாண பிரதி அவைத் தலைவர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார்.
கிழக்கு பல்கலையில் தற்பொழுது எழுந்துள்ள பிரச்சினை தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
நேற்றைய தினம் முதலாம் வருட கலைப்பீட மாணவர்கள் தொடர்பு கொண்டு என்னிடம் இந்த பிரச்சினை தொடர்பாக முறையிட்டிருந்தனர்.
அதாவது, கலைப்பீட முதலாம் வருட மாணவர்களாகிய நாங்கள் நேற்றைக்கு முன் தினம்தான் பல்கலைகழகத்திற்குள் முதல்நாள் காலடி எடுத்து வைத்து பதிவை மேற்கொண்டு இரவு தூங்கும்போது விடுதி காப்பாளர்களினால் அனைவரும் சனிக்கிழமை (21) காலை 8.00 மணிக்குள் விடுதியை விட்டு வெளியேற வேண்டுமென பணிக்கப்பட்டோம்.
முதலாம் வருட மாணவர்கள் எங்களுக்கு வீடு திரும்பிச் செல்வதற்குகூட இடம்தெரியாத நிலையில் உள்ளோம், இரண்டாம் மற்றும் மூன்றாம் வருட மாணவர்களை வெளியேற்றாமல் நேற்று பெற்றோருடன் வந்த எங்களை பொலிசில் முறைப்பாடு செய்து இந்த பல்கலைக்கழக நிர்வாகம் வெளியேற்றுகின்றது என மாணவர்கள் தெரிவித்தனர்.
அதன் பின்னர் குறித்த விடயம் தொடர்பாக கிழக்கு பல்கலையின் பிரதி உபவேந்தர் கலாநிதி கே.ஈ.கருணாகரனை அலைபேசி ஊடாக தெளிவுபடுத்தி கேட்டறிந்த போது இவ்வாறு பதிலளித்தார்.
மாணவர்கள் அனைவரும் ஒன்றுதான் தமிழ் மற்றும் சிங்களம் என்ற பாகுபடு என்பது இல்லை. பொலிசாரை கொண்டு எந்த வித்திலும் வெளியேற்றப்படமாட்டார்கள். கலைத்துறை மாணவர்களை மாத்திரம் வெளியேற்றியமையை வன்மையாக கண்டிக்கின்றேன் என்ற கூறினார்.
ஆனால் இன்று கிழக்கு பல்கலைகழகத்தின் பிரதி உபவேந்தரின் கூற்றுக்கு மாறாக பல்கலைக்கழக நிர்வாகம் உட்பட பேரவையின் சட்டம் அனைத்தும் தமிழ் மாணவர்கள் மீதும் தான் பாய்ந்துள்ளது.
இவ்வாறான பல்கலைகழகத்தின் இனரீதியான பாரபட்சம் காட்டும் செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கின்றோம்.
இன்றைய இந்த நிலைக்கு காரணம் இனரீதியான விகிதாசார முறையில் மாணவர்களை பல்கலைகழகத்திற்குள் உள்வாங்கப்படாமை.
ஏனைய பல்கலைகழகம் அதாவது, யாழ் பல்கலைக்கழக விகிதாசார ரீதியில் அனைத்து செயற்பாடுகளையும் மேற்கொண்டு வருகின்ற நிலையில் கிழக்கு பல்கலையின் செயற்பாடும் நிர்வாகத்தின் ஸ்தீரத்தின் தன்மையும் அண்மைய காலங்களில் இருந்து கேள்விக்குள்ளாக்கி உள்ளது.
கிழக்கு பல்கலைகழகத்தில் கல்வி கற்கும் பெரும்பான்மை மாணவர்களின் செயற்பாடுகளுக்கு பல்கலைக்கழக நிர்வாகம் பயந்து தங்களின் ஆசனங்களை சூடாக்குவதற்கு மாத்திரம் முன் நிற்பதாக அவற்றின் செயற்பாடுகள் அமைந்துள்ளது.
ஐந்தாவது நாளாக பல்கலைகழக பிரதி உபவேந்தரைக் கூட அவரின் கதிரையில் அமர்ந்து வேலை செய்ய முடியமால் நிர்வாக கட்டடத்தை முற்றுகையிட்டுள்ள மாணவர்களை வெளியேற்றாமல் அப்பாவி தமிழ் மாணவர்களை வெளியேற்றிமையானது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய விடயம்.
அத்துடன் கிழக்கு பல்கலைக்கழகத்தில் பெரும்பான்மை மாணவர்களுக்கு ஏதும் பிரச்சினை என்றால் அமைச்சர்களினால் நிர்வாகத்திற்கு விடுக்கப்படும் வேண்டுகோளுக்கு தலைசாய்க்கும் நிர்வாகத்தின் செயற்பாடுகளே கிழக்கு பல்கலைக்கழகத்தில் காணப்படுகின்றது.
இதுவரை காலமும் தமிழ் மாணவர்களுக்கு சிங்கள மாணவர்களினால் ஏற்பட் அநீதிகளுக்கு இதுவரைக்கும் பல்கலைகழக நிர்வாகம் எந்தவொரு நடவடிக்கையும் முன்னெடுக்கவில்லை.
தமிழ் மாணவர்களுக்கு ஒரு சட்டமும் சிங்கள மாணவர்களுக்கு ஒரு சட்டமும் போடும் கிழக்கு பல்கலைகழக நிர்வாகம்.
மட்டக்களப்பு தமிழ் புத்திஜீவிகளாகி எங்களின் தமிழ் மாணவர்களின் நிலை மிகவும் கேள்விக்குள்ளான நிலையில் உள்ளது.
கிழக்கு பல்கலைக்கழக நிர்வாகத்திலுள்ளவர்கள் அனைவரும் தமிழினத்தை சார்ந்தவர்கள், ஆனால் அவர்கள் இயற்றும் சட்டம் அனைத்தும் அப்பாவி தமிழ் மாவர்கள் மீதே பாய்கின்றது என தெரிவித்தார்.
0 comments:
Post a Comment