தற்கொலை தாக்குதல் சம்பவங்கள் குறித்து சந்தேகத்தின் பேரில் கலஹாவில் ஒருவர் கைது செய்யபப்ட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரிடமிருந்த 123 கையடக்க தொலைபேசிகள் ,324 பற்றரிகள் மற்றும் பல உபகரணங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை துப்பாக்கிகள் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபரொருவர் கிரான்பாஸ் - சேதவத்த பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது போர 12 ரக தோட்டாக்கள் 18ம் மற்றும் மில்லிமீற்றர் 9 ரக தோட்டாக்கள் 10ம் உள்ளிட்ட துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
மன்னா கத்தி 3ம் இதன்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் , 2 கிராமுக்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளும் காவற்துறையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது.
நேற்று மேற்கொள்ளப்பட்ட இந்த சுற்றிவளைப்பபில் கைது செய்யப்பட்டவர் சேதவத்த - நவலோகபுர பிரதேசத்தை சேர்ந்த 31 வயதுடைய நபர் என தெரிவிக்கப்படுகிறது.
0 comments:
Post a Comment