கல்முனை – சாய்ந்தமருது, வொலிவோரியன் சுனாமி குடியேற்றக் கிராமத்தில் இராணுவத்தினர், பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து விசேட சோதனை நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
கிராம மக்கள் அனைவரும், எம்.எம்.காரியப்பர் வித்தியாலயத்திற்கு அனுப்பப்பட்டதன் பின்னர் இந்த சோதனை முன்னெடுக்கப்பட்டது.
460 குடும்பங்களைச் சேர்ந்த 1350 பேரே இவ்வாறு காரியப்பர் வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அவர்களிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்தனர். காரியப்பர் வித்தியாலயத்தில் தங்கியுள்ள மக்களுக்கு சாய்ந்தமருது பள்ளிவாசல் நிர்வாகத்தினால் சமைத்த உணவு வழங்கப்பட்டுள்ளது.
கிழக்கு பாதுகாப்பு கட்டளைத்தளபதியின் ஆலோசனைக்கமைய, சாய்ந்தமருது பகுதியில் இரவு 6 மணியளவில் இராணுவத்தினர் விசேட சோதனை நடவடிக்கையை ஆரம்பித்தனர்.
இதன்போது உரிமையாளர் அற்ற, கைவிடப்பட்ட வான் ஒன்று கைப்பற்றப்பட்டதுடன், சந்தேகத்திற்கிடமான சில பொருட்களையும் பாதுகாப்புத் தரப்பினர் மீட்டனர்.
இதனையடுத்து, கல்முனை சாய்ந்தமருது வொலிவோரியன் சுனாமி குடியேற்றக் கிராமத்திற்குள் பாதுகாப்புத் தரப்பினர் பிரவேசித்தனர்.
வெடிச்சம்பவம் மற்றும் பரஸ்பர துப்பாக்கிச்சூடு இடம்பெற்ற பகுதியில் நீதவான் விசாரணை இன்று முன்னெடுக்கப்பட்டது.அத்துடன், அரச இரசாயனப் பகுப்பாய்வாளர் திணைக்கள அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment