பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர பதவியில் இருந்து விலக மறுப்புத் தெரிவித்துள்தாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
சிறிலங்காவில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக, இந்திய புலனாய்வு அமைப்பு போதிய தகவல்களை வழங்கியும், அதனைத் தடுக்கத் தவறியதற்குப் பொறுப்பேற்று, பாதுகாப்புச் செயலரையும், பொலிஸ்மா அதிபரையும் பதவி விலகுமாறு ஜனாதிபதி கோரியிருந்தார்.
அதற்கமை பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னான்டோ பதவி விலகல் கடிதத்தை கையளித்திருந்தார்.
மேலும், பொலிஸ்மா அதிபரும் பதவி விலகி விட்டார், புதிய பொலிஸ்மா அதிபரை வெள்ளிக்கிழமை நியமிப்பேன் என்று சிறிலங்கா அதிபர் கூறியிருந்தார்.
எனினும், பொலிஸ்மா அதிபர் இன்னமும் பதவி விலகவில்லை என அதிபர் செயலக வட்டாரங்கள் தெரிவிப்பதாக ரொய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment