தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 2 கப்
துருவிய மாங்காய் - 1 கப்
தேங்காய்த்துருவல் - 1/2 கப்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
வேகவைத்த பச்சைப்பட்டாணி அல்லது வறுத்த வேர்க்கடலை - 1 டேபிள்ஸ்பூன்
காய்ந்தமிளகாய் - 4
உப்பு - தேவைக்கு
கறிவேப்பிலை - சிறிது
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
மாங்காயை தோல் நீக்கி துருவிக் கொள்ளவும். பச்சரிசியை கழுவி தண்ணீர் சேர்த்து சாதமாக, உதிர் உதிராக வடித்துக் கொள்ளவும். பின்பு 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு பிசறி ஆற விடவும்.
கடாயில் எண்ணெயை விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளிக்கவும். சிவந்து வந்ததும் காய்ந்த மிளகாயை கிள்ளி போட்டு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கி, மாங்காய்த் துருவல், தேங்காய்த்துருவலை சேர்த்து லேசாக வதக்கி உப்பு சேர்த்து இறக்கவும். இத்துடன் சாதம், வேர்க்கடலை சேர்த்து கலந்து பரிமாறவும்.
குறிப்பு: சாதம் மஞ்சளாக வேண்டுமென்றால் வதக்கும் பொழுது மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். மாங்காயை குழைய வதக்கக் கூடாது.
0 comments:
Post a Comment