நாஞ்சில் மீன் குழம்பு செய்ய...!



25 min
தயாரிப்பு நேரம்
35 min
சமைக்கும் நேரம்
60 min
ஆயத்த நேரம்
5
பரிமாறும் அளவு
சமையல் பிரபலமான பகுதி : தமிழ்நாடு சமையல் வகை / ரெசிபி வகை : குழம்பு வகைகள்  சாப்பிடும் நேரம் : மதிய உணவு
சுவையான நாஞ்சில் மீன் குழம்பு, எளிய நாஞ்சில் மீன் குழம்பு, நாஞ்சில் மீன் குழம்பு செய்யும் முறை, பிரபலமான நாஞ்சில் மீன் குழம்பு, நாஞ்சில் மீன் குழம்பு செய்முறை, நாஞ்சில் மீன் குழம்பு சமையல் குறிப்புகள், நாஞ்சில் மீன் குழம்பு செய்வது எப்படி.
உங்கள் சுவையை தூண்டும் நாஞ்சில் மீன் குழம்பு சமையல்... பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான நாஞ்சில் மீன் குழம்பு ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க!!!


சமைக்க தேவையானவை
 மீன் (ஏதேனும் வகை) - 6 முதல் 7 துண்டுகள்
 புளி - சின்ன எலுமிச்சம் பழ அளவு
 உப்பு - தேவையான அளவு
 பச்சைமிளகாய் - 2
 வறுத்து அரைக்க:
 தேங்காய் - ஒரு சிறிய மூடி
 பெரிய வெங்காயம் – 1 அல்லது சின்ன வெங்காயம் - 8
 மல்லி விதைகள்(தனியா) - 3 மேசைக்கரண்டி
 காய்ந்த மிளகாய் - 10
 பெருஞ்சீரகம் - 1 மேசைக்கரண்டி
 மிளகு - 1 தேக்கரண்டி
 கறிவேப்பிலை – 3 நெட்டுகள்
 தாளிக்க:
 எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
 வெந்தயம் - 1 தேக்கரண்டி
உணவு செய்முறை : நாஞ்சில் மீன் குழம்பு
Step 1.
மீன் துண்டுகளை நன்கு கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். பச்சைமிளகாயை நீளவாக்கில் இரண்டாக நறுக்கிக் கொள்ளவும். புளியை ஊறவைத்து கரைத்து கொள்ளவும்.

Step 2.
அதனுடன் ஒரு நெட்டு கறிவேப்பிலை, நறுக்கியப் பச்சைமிளகாய் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்.பெரிய வெங்காயத்தை சிறுத் துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை பயன்படுத்துவதாக இருந்தால் நறுக்க தேவையில்லை. மற்ற அரைக்க வேண்டியப் பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்

Step 3.
. தேங்காயை சிறு துருவல்களாக துருவி எடுத்துக் கொள்ளவும்.வாணலியை அடுப்பில் வைத்து அரை மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் தேங்காய் துருவல், வெங்காயம், மல்லி, காய்ந்த மிளகாய், மிளகு, பெருஞ்சீரகம் மற்றும் இரண்டு நெட்டு கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து வறுத்துக் கொள்ளவும்

Step 4.
. தேங்காய் துருவல் நன்கு பொன்னிறமாக பொலபொலவென்று ஆகும் வரை வறுக்க வேண்டும்.

Step 5.
வறுத்தப் பொருட்களை ஐந்து நிமிடங்கள் ஆற வைக்கவும். பிறகு மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் நன்கு பொடித்துக் கொள்ளவும்.அதில் அரைகப் தண்ணீர் சேர்த்து நன்கு மைப் போல் மீண்டும் அரைத்துக் கொள்ளவும். (முதலிலேயே தண்ணீர் சேர்த்து அரைத்தால் நன்றாக அரையாது, மை போல் அரைத்தால் தான் இதன் சுவை கூடும்.)ஏற்கனவே கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலுடன் இந்த விழுதை சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு நன்கு குழம்பு போல் கலக்கி வைத்துக் கொள்ளவும்.

Step 6.
வாணலியை அடுப்பில் வைத்து அரை மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு சூடானதும் வெந்தயத்தை போட்டு தாளிக்கவும். வெந்தயம் பொன்னிறமானதும் கரைத்து வைத்துள்ள குழம்புக் கலவையை ஊற்றவும்.குழம்பு கொதிக்க ஆரம்பித்ததும் சுத்தம் செய்த மீன் துண்டுகளை சேர்க்கவும்

Step 7.
. குழம்பு பாத்திரத்தை மூடி வைக்கும் பொழுது மூடியை சிறிது திறந்திருக்குமாறு வைத்து பத்து நிமிடங்கள் மிதமான தீயில் வேக விடவும்மணமணக்கும், நாவூறும் சுவையான நாஞ்சில் மீன் குழம்பு தயார். இந்த குழம்பை சூடாக்கி இரண்டு நாட்கள் வைத்திருந்து சாப்பிடலாம். அடுத்த நாள் சாப்பிடும்பொழுது இதன் சுவை இன்னும் கூடும்.
Share on Google Plus

About Nelli kuddy

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment