பல்வேறு தேர்தல் பணிகளுக்கிடையே, இலுப்பூரில் உள்ள தனது வீட்டுக்கு வந்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டின் அருகே கிரிக்கெட் விளையாடிக்கொண்டு சிறுவர்களுடன் சேர்ந்து சுமார் அரைமணி நேரம் வரையிலும் கிரிக்கெட் விளையாடி மகிழ்கிறார் அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நாடாளுமன்ற தேர்தலில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, கரூர் நாடாளுமன்ற தொகுதி அதிமுக தேர்தல் பொறுப்பாளராகச் செயல்பட்டார். சுமார் 2மாத காலம் வரையிலும் தேர்தல் பணியில் ஈடுபட்டு வந்த விஜயபாஸ்கருக்கு தற்போது, அடுத்த மாதம் நடைபெற உள்ள ஒட்டப்பிடாரம் இடைத்தேர்தல் அதிமுக தேர்தல் பொறுப்பாளராக செயல்பட உள்ளார். இந்த நிலையில் தான் தொடர், பணிச்சுமைகளுக்கு இடையே புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள தனது வீட்டிற்கு வந்த விஜயபாஸ்கர், வீட்டின் அருகே கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களை அழைத்து, உங்களுடன் நானும் விளையாட வரலாமா என்று கேட்க, சிறுவர்களும் விளையாடத் தயார் என்று சொன்னதால், சிறுவர்களுடன் சுமார் அரைமணி நேரம் கிரிக்கெட் விளையாடினார். பின்புறம் நின்ற அமைச்சரின் ஆதரவாளர்கள் அமைச்சர் பந்தை அடிக்கும் போது கர கோசம் எழுப்பினர். தொடர்ந்து, அந்த சிறுவர்கள் அணிக்கு இலுப்பூர் சூப்பர் கிங்க்ஸ் என்ற பெயரைச் சூட்டினார்.
சிறுவர்களிடம் கிரிக்கெட் பேட், பந்து உள்ளிட்டவற்றைப் பரிசாக வழங்கினார். சமூக வலைத்தளங்களில் வைரலாகும் இந்த வீடியோவிற்கு பல தரப்பினரும் பாராட்டுகள் தெரிவிக்கும் நிலையில், ஒரு சிலர் விளம்பரத்திற்காகத் தான் அமைச்சர் இதுபோன்று சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடுவதாகவும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். தேர்தல் பணிகள் மற்றும் பணிச்சுமைகளுக்கிடையே ஆவரை ஆசுவாசப்படுத்திக்கொள்ளவே அமைச்சர் சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடினார். அனைவரைப் போலவும் அமைச்சருக்கும் கிரிக்கெட் விளையாடுவதற்கு ஆசை இருக்காதா? இதில் எந்த விளம்பரமும் இல்லை என்கின்றனர் அமைச்சரின் ஆதரவாளர்கள். ஐ.பி.எல்லின் தாக்கம் அமைச்சரைத் தொற்றிக்கொண்டுவிட்டது.
0 comments:
Post a Comment