யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் கவச வாகனம் மற்றும் பேருந்துகளில் நூற்றுக்கு மேற்பட்ட படையினர் குவிப்பு!


யாழ்ப்பணம் பல்கலைக்கழக வளாகம் மற்றும் மருத்துவ பீட இறுதி வருட மாணவர்கள் தங்கியிருக்கும் யாழ். போதனா வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள மாணவர் விடுதி இன்று வெள்ளிக்கிழமை பாதுகாப்பு நடவடிக்கையின் நிமித்தம் சோதனை செய்யப்பட்டது.

வளாகத்திற்குள் செய்தி சேகரிப்பதற்கு ஊடகவியாலாளர்களை அனுமதிக்கவேண்டாம் என யாழ் பல்கலைக்கழக பதிவாளர் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஊடாக அறிவுறித்தினார்.

இராணவத்தினர் மட்டும் தனித்து இந்த சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர். அதிகாலை 5 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்ந நடவடிக்கையில் கவச வாகனம் மற்றும் பேருந்துகள் சகிதம் சுமார் 300 தொடக்கம் 450 வரையான இராணுவத்தினர் குவிக்கப்பட்டு சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கடந்த கால போர் சூழலில் யாழ். பல்கலைக்கழகமானது பாதுகாப்பு தரப்பினரால் உன்னிப்பான கவனத்தில் இருந்த ஒரு வளாகமாகும். கடந்த 2009 ஆம் ஆண்டு வரையில் யாழ். பல்கலைக்கழகத்தில் நிகழ்வுகள் ஏதும் இடம்பெறுவதற்கான சாத்தியம் உள்ள நிலையில் இராணுவம் மற்றும் புலனாய்வாளர்களின் பிரசன்னமாக முடியாத சூழல் நிலவியது.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள தீவிரவாத தாக்குதலினை தொடர்ந்து நடைமுறைப்புடுத்தபட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கையின் நிமித்தம் தற்போது யாழ். பல்கலைக்கழக வளாகத்திற்குள் மீண்டும் இராணுவம் உள்நுழைக்கபட்டு சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

இந்த சோதனை நடவடிக்கைகளின் நிமித்தம் பல்கலைக்கழக பதிவாளர் மற்றும் ஊழியர்கள் தமது கடமை நேரத்திற்கு சற்று முன்னதாக சமூகமளித்த நிலையில் ஒவ்வவொரு பீடங்களும் அதனுள் உள்ள விரிவுரைக் கூடங்களும் தனித்தனியாக சோதனை இடப்பட்டது.

வளாகத்திற்குள் நுழையும் ஊழியர்களின் பைகள் பரிசோதிக்கப்பட்ட பின்னர் ஊழியர்கள் வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்கபட்டனர். நுழைவாயிலில் பாதுகாப்பு கடமையில் இருந்த பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இந்த சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டனர்.

எதிர்வரும் 6ஆம் திகதி பாடசாலைகள் அனைத்தும் திட்டமிட்டபடி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ள நிலையில் அடுத்த சில தினங்களில் பல்கலைக்கழக கற்றல் செயல்பாடுகள் ஆரம்பிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நாடளாவிய ரீதியில் அனைத்து பல்கலைகழக வளாகங்களிலும் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share on Google Plus

About Nelli kuddy

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment