தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் உறுப்பினர்களுக்கு வாள்களை தயாரித்து வழங்கியதாக கூறப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் இரண்டு சந்தர்ப்பங்களில் 60க்கும் மேற்பட்ட வாள்களை செய்து கொடுத்துள்தாக தெரிவிக்கப்படுகின்றது.கொழும்பில் இருந்து நீர்கொழும்புக்கு பேருந்தில் செல்லும் போது பேலியகொட பகுதியில் வைத்து அவர் கைதானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் அவர் நீர்கொழும்பு - வடிக்காலை பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் குறித்த வாள்களை தயாரித்து வழங்கியுள்ளார்.
அவ்வாறு வழங்கப்பட்ட வாள்களில் இரண்டு வாள் அவரது வீட்டுக்கு அருகில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.
0 comments:
Post a Comment