வவுனியா -மாத்தறை ரயில் தீப்பற்றியது.!

வவுனியாவில் இருந்து மாத்தறை நோக்கி சென்று கொண்டிருந்த புகையிரதத்தின் எஞ்சின் ஹிக்கடுவை அருகே தீப்பற்றிக் கொண்டுள்ளது.
இச்சம்பவம் இன்று மாலை நடைபெற்றுள்ளது.
வவுனியாவிலிருந்து நோக்கிச் சென்று கொண்டிருந்த குறித்த புகையிரதம் ஹிக்கடுவை தாண்டி வவுலகல பிரதேசம் ஊடாக சென்று கொண்டிருந்த போது எஞ்சின் ஒயில் வெளியே கசிந்து அதன் காரணமாக தீப்பற்றிக் கொண்டுள்ளது.
இதனையடுத்து புகையிரதத்தை உடனடியாக நிறுத்திய அதன் சாரதி, ஏனையவர்களின் உதவியுடன் தீயை அணைத்துள்ளார்.
எஞ்சின் ஒயில் வெளியே பீய்ச்சியடிக்கப்பட்டதில் சாரதியின் பக்கவாட்டுக் கதவொன்று முற்றாக சேதமடைந்துள்ளது.
அத்துடன் முதலாம் வகுப்பு பெட்டிகளின் பக்கவாட்டுப் பகுதியும் நிறம் மாறியுள்ளது.
இதனையடுத்து புகையிரதத்தில் வருகை தந்த பயணிகள் வேறு வாகனங்களில் தமது பயணத்தைத் தொடர்ந்துள்ளனர்.
காலியில் இருந்து வந்த புகையிரத எஞ்சின் துணையுடன் குறித்த ரயில் தற்போது மாத்தறைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

Share on Google Plus

About சாணக்கியன்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment