ஒழுக்க விழுமியங்களில் புலிகளின் தலைவர் - மீட்டுப்பார்க்கும் விமல்

2014 இல் அளுத்கமை, பேருவளையில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக தாக்குதல் ஒன்று இடம் பெற்றிருந்தது, அளுத்கமை தர்கா நகரில் பொதுபல சேனாவினால் ஏற்படுத்தியிருந்த தாக்குதல் பேரினவாதத்தினால் நடாத்தப்பட்ட இனவழிப்பு முறையிலான ஓர் தாக்குதல் என்றுதான் பதியப்பட்டுள்ளது.

இது அக்கால அரசின் ஆதரவோடு நடத்தப்பட்டதா அல்லது சிங்கள இனத்தவர்களால் நடத்தப்பட்டதா என்பது முக்கியமல்ல. தாக்குதல் சம்பவத்தின் பின்னர் மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மின் அப்போது தெரிவித்திருந்தார்.

“இது நல்ல முன்னுதாரணம் தமிழர்களின் போராட்டம் இன்று வரை நின்று நிலைக்கின்றதென்றால் அதற்கு ஒரு நியாயம் இருந்தது. என்பதை நான் இங்கு கூற விரும்புகின்றேன்.

வன்முறைகள் நடந்த தர்கா நகர் பேருவளைக்கு நான் சென்ற போது ஓர் முஸ்லிம் தாய் என்னைப் பார்த்து கேட்டார் பிரபாகரன் எங்கே? என்று.

ஏன் என்ற மறுகேள்விக்கு அத்தாய் அளித்த பதில் “பிரபாகரன் இருந்திருந்திருந்தால் எங்களுக்கு இந்த நிலைமை நேர்ந்திருக்காது”

இது அத்தாயின் வேதனை அவரது மனக்குமுறல் அனைத்தையும் வெளிப்படையாக காட்டிவிட்டது அதே சமயம். அஸ்மின் கூறிய இந்த வார்த்தைகள் வெறும் வார்த்தைகளாக தற்போது எனக்கு தெரியவில்லை காரணம் அதில் பொதிந்துள்ள உண்மை.

அண்மையில் யாழ் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் அறிந்த விடயமே. இதனை அரசியல் இலாபத்திற்காக மாற்றும் முயற்சிகளும் அரங்கேற்றப்பட்டு கொண்டுதான் இருக்கின்றன.

இந்த மோதல் சம்பவம் குறித்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தனது கருத்தாக என்றோ அஸ்மின் கூறிய இந்த வார்த்தைகளையேதான் கூறியிருந்தார்.

“விடுதலைப் புலிகளின் மாவீரர் தினம் யாழ்ப்பாணத்தில் நினைவுகூர்வதற்கு அரசாங்கம் வழங்கிய அனுமதியே அங்கு சிங்கள, தமிழ் மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்படக் காரணம்.

விடுதலைப் புலிகளின் தலைவர் போர்செய்த காலத்தில்கூட அமைதிப்பூங்காவாக இருந்த யாழ் பல்கலைக்கழகம் தற்போது இனவாத செயற்பாடுகளை அடுத்து போர்க்களமாகியிருக்கிறது.

பிரபாகரன் இருந்த காலத்தில் கூட இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறவில்லை”. இவை விமல் வீரவன்ச ஊடகங்களுக்கு தெரிவித்திருந்த கருத்துக்கள்.

உண்மையில் விடுதலைப் புலிகளின் மௌனிப்புக்கு பின்னர் தான் இவ்வாறான செயற்பாடுகள் யாழில் துளிர்விட ஆரம்பித்துள்ளன. கலாச்சார பண்பாட்டுக்கு பெயர்பெற்ற யாழ் இவ்வாறு மாற்றமடைந்தது வருகின்றதனை விமல் மட்டுமா ஒத்துக்கொள்கின்றார்.

எல்லாளன் நடவடிக்கை எனக் கூறப்படும் அநுராதபுர வான்படைத்தாக்குதல் 2007 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளினால் மேற்கொள்ளப்பட்டது. இத் தாக்குதலை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.

குறிப்பாக இந்தத் தாக்குதல் மேற்கொள்ளும் போது இராணுவ சொத்துக்களுக்கு மட்டுமே சேதங்கள் விளைவிக்கப்பட வேண்டும். மாறாக பொதுமக்களுக்கோ அல்லது இராணுவத்தினரின் வதிவிடங்களுக்கோ தாக்குதல் நடத்தப்படக்கூடாது என்பது புலிகள் தரப்பு தாக்குதல் தலைவர்களாக இருந்தவர்கள் கட்டாயமாக வலியுருத்திய விடயமாக கூறப்படுகின்றது.

யுத்தம் என்பது எதிரிப்படைகளுக்கு எதிராக மட்டுமே நிகழ்த்தப்பட வேண்டும் என புலிகள் எடுத்திருந்த தீர்மானம் ஒழுக்க விடயத்தை நினைவுபடுத்துகின்றது என்றே சொல்லவேண்டும்.

விடுதலை புலிகளின் தலைவர் யுத்தம் தொடர்ந்திருந்தார் முப்பது வருடங்களுக்கு மேலாக யுத்தம் நடைபெற்று கொண்டுதான் வந்தது ஆனாலும் அக்கால கட்டத்தில் போர் போராக மட்டுமே காணப்பட்டதே தவிர கலாச்சாரங்கள் மீது போர் நடாத்தப்படவில்லை.

வாள்வெட்டுக்கள், குழுமோதல்கள் பெண்களுக்கு எதிரான வன்முறைகள். இவை மட்டுமா போதைப்பொருள் பாவனையிலும் தற்போது யாழ் தமக்குரிய இடத்தை பிடித்து கொண்டு விட்டதனை அவதானிக்க முடியுமாக இருப்பது வேதனையளிக்கின்றது.

யாழில் அக்காலகட்டத்திலும் பண்பாடு கலாச்சார நிகழ்வுகள் தொடர்ந்த வண்ணமே இருந்தது. அண்மையில் பல்கலைக்கழகத்தில் இடம் பெற்ற மோதல் போன்று கலாச்சாரம் பண்பாடுகளுக்கு எதிராக சீர்கேடுகள் இடம் பெற வில்லை. கல்வி கூடங்களில் மட்டுமல்ல எங்குமே ஒழுக்க விழுமியங்களுக்கு எதிராகவும் மத நம்பிக்கைகளுக்கு எதிராகவும் சீர்கேடுகள் இடம்பெற வில்லை என்பது மட்டும் உண்மைதான்.

அப்போதும் கலாச்சார நிகழ்வுகள் நடாத்தப்பட்டன மாணவர்களின் கல்வி செயற்பாடுகள் செவ்வனே நடைபெற்று கொண்டு வந்தது. வடக்கிலும் சரி தெற்கிலும் சரி சமூக ஒழுக்கங்கள் மட்டும் பேணப்பட்டு வந்தமை எவராலும் மறுக்க முடியாது என்பதே திண்ணம்.

“பிரபாகரனுடைய கொள்கையை தான் ஏற்றுக்கொள்ள முடியாதது. ஆனால் பிரபாகரன் என்ற தனி மனிதன் ஒரு மிகப்பெரிய போர்வீரன் மட்டுமல்லாது ஒழுக்கம் நிறைந்தவர். நான் அவருடைய எதிரி என்ற முறையில் என்னை கொலை செய்ய முற்பட்டார். ஆனால் என் குடும்பம் மீதோ என் சொந்தங்கள் மீதோ ஒருபோதும் அவர் தாக்குதல் நடத்தவில்லை. என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதனை பெறும்பாண்மை அரசியல் வாதிகளும் ஒத்துகொண்டே கருத்துக்களை வெளியிடுகின்றனர். ஆக வடக்கு - கிழக்கில் ஏற்பட்டு வரும் சமூக சீர்கேடுகள் முக்கியமாக விடுதலைப்புலிகளின் மௌனிப்பிற்கு பிறகுதான் சம்பிரதாயமாக மாற்றப்பட்டு கொண்டு வருகின்றது. பண்பாட்டிற்கும் ஒழுக்கவிடயங்களுக்கும் மறுபெயராக யாழ் திகழ்ந்து வந்தமை புலிகளின் தலைவர்தான். என்ற தீர்மானத்தையும் மனதில் எழவைப்பதில் எந்த விதத்திலும் தவறாகாது.
Share on Google Plus

About சாணக்கியன்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment