இலங்கையில் உள்ள தமிழ் ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் எவ்வளவுக்கு பேய்க்குஞ்சுகளாக இருக்கின்றார்கள் என்பதை வவுனியா ஜக்சன் கண்டு பிடித்து அவர்களை தனது தந்திரத்தால் விசர்க்குஞ்சுகளாக்கி மிகப்பெரிய ஏமாற்று வேலையை செய்து முடித்துள்ளார்.
ஒரு தமிழன் அதுவும் இலங்கை வடபுலத்தில் வாழ்கின்ற தமிழன் உலகமே வியக்கத்தக்க வகையில் ஒரு தொழில்நுட்பக் கண்டுபிடிப்பை செய்திருந்தால் உண்மையில் அது பாராட்டத்தக்கதாகும். அத்துடன் அவனை ஊக்கப்படுத்தி அவனது முன்னேற்றத்தில் அக்கறை கொள்ள வேண்டியதும் ஒவ்வொரு தமிழ் உணர்வாளர்களின் தலையாய கடமையாக இருக்க வேண்டும். ஆனால் தமிழர்களை முட்டாளாக்கி தன்னை ஒரு கண்டுபிடிப்பாளன் எனவும் 200 கோடிக்க தனது கண்டுபிடிப்புக்களை விற்பனை செய்ததாகவும் தெரிவித்து ஊடகங்களை மயக்கி ஊடகவல்லுறவுக்குள்ளாக்கியவனின் பொட்டுக் கேட்டை இங்கு தந்துள்ளோம்.
தன்னை ஒரு கண்டுபிடிப்பாளர் என காட்டிக் கொண்டு ஜக்சன் செல்லம் செய்த தில்லாலங்கடி வேலை என்ன என்பதை இங்கு விளக்கியுள்ளோம்.
இது நிக்சனின் இணையத்தளமாகும். http://www.nnjackshon.com. இந்த இணையத்தளத்திலேயே அவன் கீழ் வரும் அமைப்புக்களில் அங்கத்தவராக இருப்பதாக தெரிவித்துள்ளான்.
தன்னை ஒரு கண்டுபிடிப்பாளர் என காட்டிக் கொண்டு ஜக்சன் செல்லம் செய்த தில்லாலங்கடி வேலை என்ன என்பதை இங்கு விளக்கியுள்ளோம்.
இது நிக்சனின் இணையத்தளமாகும். http://www.nnjackshon.com. இந்த இணையத்தளத்திலேயே அவன் கீழ் வரும் அமைப்புக்களில் அங்கத்தவராக இருப்பதாக தெரிவித்துள்ளான்.
1. Member of Union of Concerned Scientists
2. Member of World Association of Young Scientists (WAYS)
3. Member of Sri lanka Inventors Commission (SLIC)
4. Member of Young Tamil Inventors Society of Sri lanka (YTISSLK)
5. Member of World Federation of Scientists (WFS Switzerland )
6. Member of AAAS
7. Member of Northwest Scientific Association (NWSA)
8. United Inventors Association (UIA)
இவ்வளவு அமைப்பிலும் அவன் அங்கத்தவராக இருப்பதாக கூறுவது மிக மிக கேவலமான ஒரு செயற்பாடாகும். இவ்வளவு அமைப்பிலும் இவன் அங்கத்தவராக இருப்பதை ஜக்சன் உறுதி செய்தால் (இவற்றில் பெரும்பாலன பெயர்களில் ஒரு அமைப்புமே இல்லை) இவனைப் பற்றி நான் எழுதும் என் கையை நானே வெட்டி எறிவேன்.
இவனது இணையத்தளத்தில் தனது கண்டுபிடிப்புக்களுக்கான விலையாக 29500 டொலர்கள் மாத்திரம் போட்டுள்ளான். அதன் இலங்கைப் பெறுமதி 42 லட்சம் மாத்திரமே. ஆனால் இந்த மதிப்பான பொருளை எந்த லுாசன் இருநுாறு கோடி கொடுத்து வாங்கியவன்.
மின்சாரம் மற்றும் எரிபொருள் இன்றி அசையும் வளியும் (காற்றும்) இன்றி இயங்கக் கூடிய தன்னியக்க நீர் இறைக்கும் இயந்திரம் என்று ஜக்சனால் கூறப்பட்டதன் தொழில்நுட்ப செயற்பாடு என்னவெனின் ஏற்கனவே பெற்றோல்மாக்ஸ் விளக்கில் வளியை நிரப்பி அதன் அழுத்த சக்தியில் மண்ணெயை வெளியே பீச்சியடிக்கும் தொழில்நுட்பமே என ஜக்சனின் கண்டுபிடிப்புப் பற்றி அறிந்த அவரது நண்பன் எமக்குத் தெரிவித்திருந்தார். இதற்காக ஜக்சன் பல பெற்றோல்மாக்ஸ் விளக்குகளைப் பழுதாக்கிப் பழுதாக்கி பின்னர் அந்த விளக்கையே மாற்றியமைத்து ஒரு வாளிக்குள் தண்ணீரை விட்டு காற்று அடித்து தண்ணீரை பீச்சியடித்துவிட்டு அதை வைத்தே பாரிய இயந்திரங்களையும் செயற்படுத்தலாம் என ஒரு பொருட்காட்சியில் கொண்டு சென்று காட்சிப்படுத்தியதாக அவனது நண்பன் தெரிவித்துள்ளான்.
அத்துடன் இவ்வாறு பல லுாசுத்தனமான செயற்பாடுகளைச் செய்து விட்டு அதனை பலரிடம் கொண்டு சென்று காட்டிய போது அவர்கள் அதைப்பார்த்து சிரித்துவிட்டு அவனை அனுப்பியதாக அவனது நண்பன் தெரிவித்தான்.
ஜக்சன் பாடசாலையில் செய்த பாலியல்திருவிளையாடல்கள் காரணமாக தான் படித்த வீரபுரம் மணிவாசகர் மகா வித்தியாலய பாடசாலையில் இருந்து துரத்தப்பட்டுள்ளான். எப்பவும் சினிமா கதாநாயகர்கள் போல் சீன் காட்டித் பலரிடம் அடி உதைப்பட்டதாகவும் நண்பர்கள் வட்டாரத்தில் இருந்து தெரியவருகின்றது.
அத்துடன் வவுனியாவில் கடந்த பாராளுமன்றத்தேர்தல் 2015ல் தேர்தலில் கப்பல் சின்னத்தில் போட்டியிட்டு 25 வாக்குகள் பெற்றவன்தான் இந்த ஜாக்சன்.
இவ்வாறு கேவலப்பட்டுக் கொண்டிருந்தாலும் எப்படியாவது ஓவர்நைற்றில் ஒபாமா ஆகவேண்டும் என்ற நினைப்பு அவனிடத்தில் இருந்ததாக அவனது நண்பர்கள் தெரிவித்திருந்தனர்.
அதற்காக அவன் விரித்த வலையிலேயே ஊடகவியலாளர்களாகச் சென்ற அப்பாவிகள் ஊடக வல்லுறவுக்கு உள்ளாகி வந்துள்ளார்கள்.
பெயர், ஊர் தெரியாத 10 லட்சமே முதலீடு இல்லாத ஒரு டுபாக்கூர் நிறுவனமான ஈஸ்ரன் ஈகிள் புறொப்பட்டிஸ் டெவெலப்பர்ஸ் என்ற நிறுவனத்தில் அவனுக்கு இருந்த தொடர்பை வைத்து அவன் ஊடகவியலாளர்களின் கால்களுக்குள்ளாலேயே சிக்சர் அடித்துள்ளான்.
சாதாரணமாக கந்தசாமி என்பவர் ஒரு பழக்கடையை சட்ட ரீதியாக தொழில் பதிவு பதிந்து செய்து வைத்திருக்கிறார். அவரது பழக்கடையில் தினமும் 500 ரூபா மட்டுமே பழங்கள் விற்பனை நடக்கும். குறித்த ஜக்சன் கந்தசாமியுடன் நல்ல நெருக்கத்தில் இருக்கிறான். அவன் கந்தசாமியின் பதிவு செய்யப்பட்ட பழக்கடையை வைத்து ஒரு திட்டம் தீட்டுகின்றான். அதுதான் பனம்பழம் விற்கும் திட்டம்.
வித்தியசமான சுவையுள்ள பனம்பழத்தை உற்பத்தி செய்துள்ளேன். அவற்றை இந்த நிறுவனத்திற்கு பத்தாயிரம் கோடி ரூபாவுக்கு விற்பனை செய்கின்றேன் என ஊடகங்களை அழைத்து அவர்களுக்கு முன்னாலேயே கந்தசாமியும், ஜக்சனும் ஒப்பந்தமும் செய்து பரிமாறிக் கொள்ளலாம். இங்கு யாருக்கு என்ன லாபம்‘?
ஒரு தெருக்கோடியில் இலையன் கலைத்துக் கொண்டிருந்த கந்தசாமி பத்தாயிரம் கோடிக்கு பனம்பழம் வாங்கிவிட்டானா? என அறிந்து அந்த பனம்பழ சுவையை அறிய நீங்கள் கட்டாயம் அந்தக் கடைக்குப் போவீர்கள். கந்தசாமி சொல்லுவார் அந்தப் பனம்பழம் இப்போ இல்லை.ஆனால் லட்டு இருக்கு. வாங்கிச் சாப்பிட்டுப்பாருங்கள் என உங்களுக்கு தனது நொய்ந்து போன லட்டை விற்க முனைவார். நீங்களும் பத்தாயிரம் கோடிக்கு பனம் பழம் வாங்கினவன். கட்டாயம் லட்டும் நல்லா இருக்கும் என்டு வாங்கிச் சாப்பிடுவீர்கள். அவனுக்கு லட்டு நல்ல அமோக விற்பனையாகும். அதோட வங்கியிலும் போய் கந்தசாமி கடன் வாங்கலாம். பத்தாயிரம் கோடிக்கு பனம்பழம் வாங்கினவன். இவனுக்கு நல்லா நாங்கள் கடன் கொடுக்கலாம் என்று வங்கியும் கடன் கொடுக்கும். கந்தசாமிக்கும் கௌரவ அந்தஸ்து கிடைத்துவிட்டுவிடும்.
இங்கால பனம்பழத்தை பத்தாயிரம் கோடிக்கு விற்ற ஜாக்சனுக்கு செல்லுமிடமெல்லாம் இராஜமரியாதை கிடைக்கும். ஜக்சனைச் சுற்றி ஒரு ஒளிவட்டம் தோன்றும். ஜக்சன் பல பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுப்பார். தன்னை மாற்றுக்குழுக்கள் கப்பம் கோரி அச்சுறுத்துவதாக கருத்துத் தெரிவிப்பார். அதன் பின்னர் சிலவேளை ஜக்சன் இளம் விஞ்ஞானி, கண்டுபிடிப்பாளன் என்ற போர்வையில் வடக்கு மாகாணசபை முதலமைச்சராக வருவதற்கும் முயற்சிப்பார். அல்லது நாடாளுமன்றம் செல்ல முயற்சிப்பார். இவரை பலர் பொன்சர் செய்து பல நாடுகளுக்கும் கூப்பிட்டு கௌரவிப்பார்கள். ஆனால் ஜக்சன் அண்ணா உற்பத்தி செய்த பனம்பழம் பற்றி எவரும் கதைக்க கூடாது. கேட்டக கூடாது. ஏனெனில் அது தொழில் ரகசியம் என்று சொல்லிவிட்டு இருந்துவிடுவார். ஆனால் பனம் பழம் ஒருபோதும் சந்தைக்கும் வராது.
ஜக்சன் அண்ணா இதுக்குத்தானே ஆசைப்பட்டவர். வங்கி நல்லா வளரும். அபிவிருத்தி வங்கியில் வைப்பிலிட்டவர்கள் அவதானம்.
தம்பி ஜக்சனிடம் கொஞ்சக் கேள்விகள். இந்தக் கேள்விகளுக்கு பதில் அனுப்பினால் நிச்சயம் பிரசுக்க நடவடிக்கை எடுக்குமாறு இணையத்தளங்களை கேட்டுக் கொள்வேன்.
1) நீங்கள் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் பின்னர் இந்தியாவுக்கு மும்பை நிறுவனத்திற்கு விற்பனை செய்ததாக தெரிவிக்கும் நிறுவனத்தின் பெயரையும் நீங்கள் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் உங்களுக்கு தரப்பட்ட பண விபரத்தையும் ஆதாரங்களுடன் (வங்கி கணக்கு கூற்றுடன்) தரமுடியுமா?
இவனுடைய தொழில்நுட்பத்தை வாங்கியதாக இவன் தெரிவித்த நிறுவனம் Jay Pee Corporation எனும் நிறுவனம் இந்தியாவில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மிகப்பெரிய கட்டுமான நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் இணையத்தளம் http://jalindia.com ஆகும். இந்த இணையத்தளத்தை திறக்கும் போதே ஒரு எச்சரிக்கை தகவல் வருகின்றது. எமது நிறுவனத்தை வைத்து பல போலிகள் பல்வேறு பித்தலாட்டங்களைச் செய்து வருகின்றார்கள். அவதானமாக இருங்கள் என என பொருள்பட எச்சரிக்கை வருகின்றது.
ஜக்சனிடம் இந்திய Jay Pee Corporation நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் என கூறி பீலா விட்டு ஊடகவியலாளர்கள் மற்றும் எல்லோரையும் ஏமாற்றிய பித்தலாட்டக்காரன் இவன்தான். இவனது பெயர் பிலிப்லாசர். பிலிப்லாசருக்கும் ஜக்சனுக்கும் என்ன தொடர்பு எனின் இருவரும் கிறிஸ்தவ மதத்தின் ஒரு உதவாத கேவலம் கெட்ட பிரிவு ஒன்றின் அங்கத்தவர்கள். இருவரும் அந்தப் பிரிவின் மத போதகர்கள். இவர்கள் பல தடவை இந்தியாவில் சந்தித்துள்ளார்கள். இதற்கான அத்தாட்சிகள் இங்கு தரப்பட்டுள்ளன.
ஜக்சன் தனது மதத்தை வளர்ப்பதற்காக பெருமளவு நிதியைப் பெற்று இலங்கைக்கு கொண்டு வருவதற்காக தனது கண்டு பிடிப்பு என்ற போர்வையில் பிலிப்லாசரை இற்குள் இழுத்துள்ளான். அத்துடன் குறித்த மத அமைப்பும் தமது மதத்தைப் பரப்புவதற்காக திட்டமிட்டு செயற்பட்டதாக அதிர்ச்சித் தகவல்கள் எமக்கு கிடைத்துள்ளன.
2) இந்தக் கண்டு பிடிப்புக்கு உங்களால் பெறப்பட்ட பணத்திற்கு இலங்கை அரசாங்கத்தினால் வரி அறவிடப்பட்டதா? அதற்கான ஆதாரங்களைத் தரமுடியுமா?
3) உங்களால் கண்டு பிடிக்கப்பட்ட மிக முக்கிய தொழில்நுட்பங்களை ஏன் இலங்கையில் உள்ள பிரபல தொழில் நிறுவனங்கள் வாங்கவில்லை. ஏன் உலகத்தில் உள்ள ஏனைய முக்கிய நிறுவனங்கள் வாங்கவில்லை. இவ்வளவு பல கோடி ரூபாக்கள் மதிப்புள்ள உங்களது கண்டுபிடிப்புக்கள் வெறும் சில்லித்தனமானவை என அவை கருதியனவா?
4) இதை விட ஏராளமான உங்கள் அந்தரங்கங்கள் தொடர்பான கேள்விகள் இருக்கின்றன. ஆனால் அது தேவையில்லை. ஏனெனில் சனம் அதைத்தான் விழுந்து விழுந்து படிக்கும்.
யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு பத்திரிகையான உதயன் பத்திரிகையிலேயே இவனது வீரப்பிரதாபங்கள் முதலில் வெளிவந்தன. அதன் பின்னர் ஏனையவைகள் எல்லாம் விழுந்தடித்துக் கொண்டு செய்தி வெளியிட்டன. அதிலும் ஒரு படி மேலே போய் ஜாக்சனுக்கு நுாறு கோடி கேட்டு கொலை அச்சுறுத்தல். மாற்றுக் குழுக்களுக்கு ஜாக்சன் வேண்டு கோள் என்றும் செய்தி வெளியிட்டுள்ளன.
பயித்தம் பணியாரமாக மக்களால் விரும்பிச் சுவைக்கப்பட்ட உதயன் பத்திரிகை தற்போது மாட்டுக்கு வைக்கும் தேங்காய் புண்ணாக்கின் நிலைக்கு வந்துவிட்டது. பத்திரிகை முதலாளி சரவணபவன் தனது சொந்தப் பத்திரிகையை வைத்தே தேர்தலில் போட்டியிட்டு தோல்வி நிலைக்கு வந்து சுமந்திரன் தயவால் நாடாளுமன்றத்தினுள் நுழைந்தவர். இப்படி இருக்கின்றது மக்களுக்கு உதயன் பத்திரிகையின் தன்மை.
தனது கிளிநொச்சி மாவட்ட பிரதான காரியாலயத்தினுள் வைத்து 15 வயதுச் சிறுமியுடன் காமலீலைகள் புரிந்து கர்ப்பமாக்கிய காவாலி ஊழியரின் நிலை கூடத் தெரியாது வெங்கினாந்தித் தனமா இருந்தவர்களால் ஜக்சனின் பித்தலாட்டம் புரியாமல் இருந்திருக்கலாம். ஆனால் ஏனைய ஏதாவது தமிழ் ஊடகங்களாவது ஜக்சனை குறுக்குக் கேள்வி கேட்டார்களா? ஜக்சன் வைத்த ஊடகவியலாளர் மகாநாட்டில் எல்லா ஊடகவியலாளர்களும் அவன் சொன்னதை அப்படியே செய்தியாகப் போட்டுவிட்டு பேசாமல் இருக்கிறார்கள்.
ஆனால் ஒன்று மட்டும் உண்மை. தற்போதய ஊடகங்களை நம்பி வாழும் எங்கட மக்கள் பரிதாபத்துக்குரியவர்கள்.
பிச்சைக்காரனிடமும் பணம் பறித்துப் பழகிய வவுனியா புளொட் உறுப்பினர்கள் இவனிடமும் நுாறு கோடி கேட்டதாக இவன் பொலிசாரிடம் முறைப்பாடு செய்துள்ளான். இதை எந்த சினிமாப்படத்திலாவது வடிவேலை வைத்து நடித்துச் சிரிக்கலாம்.
குறிப்பு - நாளை மறுதினம் காற்று இன்றி, மின்சாரம் இன்றி, சூரிய சக்தி இன்றி நீர் இறைக்கும் கருவி ஒன்றை எனது 4 வயது மகன் உங்கள் முன் அறிமுகப்படுத்துவான். விரும்பியவர்கள் வந்து பார்க்கலாம். அல்லது உங்கள் கிணற்றுப் பக்கம் பாருங்கள். துலா அல்லது கப்பி இருக்கும். பிடித்து இழுத்து தண்ணீர் அள்ளி வெளியே விடுங்கள். உங்களுக்கும் பத்தாயிரம் கோடி ரூபா தருவதற்கு ஒருவன் காத்திருப்பான். அதை உதயன் பத்திரிகையும் படம் பிடித்துப் போடும்.
நன்றி
குறுக்கால போவான்.
0 comments:
Post a Comment