கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல் ஜூலை 24, 2001 அன்று விடுதலைப்புலிகளின் 14 கரும்புலி மறவர்களால் நடத்தப்பட்ட இலங்கையின் வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.
கட்டுநாயக்கா விமானப் படைத்தளத்திற்கு அருகிலேயே பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையம் அமைந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
தாக்குதல் நடத்தப்படுவதற்கு ஒரு நாள் முன்னர் சிங்கள இசையைக் கேட்டுக் கொண்டிருந்த விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் விமான நிலையத்தின் அருகிலிருந்த பூங்காவில் இருந்தனர் என்றும் அவர்கள் மீது ஏற்பட்ட சந்தேகத்தினால் விமான நிலையத்திற்கு அருகில் வசித்தவர்கள் விமான நிலைய அதிகாரிகளுக்குத் தகவல்கள் அளித்தும் துரிதமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. பின்னர் அங்கு அதிகாரிகள் வந்து பார்க்கும் பொழுது பூங்காவில் எவரும் இருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
தாக்குதலின் பின்னணி.
இத்தாக்குதலினை வடிவமைத்தவர்கள் விடுதலைப்புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மான் ஆகியோர்.
கட்டுநாயக்க விமானப் படைத்தளம் மீதான கரும்புலித் தாக்குதலை தலைமையேற்று நடத்தியவர் விடுதலைப் புலிகளின் திட்டமிடல் தளபதி கேணல் சாள்ஸ் அவர்கள்.
- 2001 ஜூலை 23 திங்கட்கிழமை மாலை 8.30 14 கரும்புலிகள் உறுப்பினர்கள் ராஜா பெர்னாண்டோ விளையாட்டு மைதானத்தில் கூடினர்.
- 2001 ஜூலை 23 திங்கட்கிழமை மாலை 9:45 மணியிலிருந்து 11:15 அப்பகுதியில் மின்சார சேவை தடைப்பட்டது.
- 2001 ஜூலை 24 செவ்வாய்க்கிழமை அதிகாலை 3:30 மணியளவில் தாக்குதல் தொடங்கப்பட்டது.
- 2001 ஜூலை 24 செவ்வாய்க்கிழமை படைத்தளத்தில் இருந்த 21 படை விமானங்கள் மற்றும் பயணிகள் விமானங்கள் அழிக்கப்பட்டன.
- 2001 ஜூலை 24 செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணிவரை தாக்குதல் நீடிக்கப்பட்டது.
தாக்குதலினால் ஏற்படுத்தப்பட்ட இழப்புகள் இலங்கை அரசின் கூற்றுப்படி அழிக்கப்பட்ட விமானங்கள் 14 என்று கூறப்பட்டது.
விடுதலைப்புலிகளின் அதிகாரப் பூர்வப் பத்திரிக்கையான ஈழநாதத்தின் கூற்றுப்படி அழிக்கப்பட்ட விமானங்கள் எண்ணிக்கை 28 ஆக வெளியிடப்பட்டது.
ஈழநாதத்தின் வெளியீடு ( 2001 நாளிதழ் )
முற்றிலுமாக அழிக்கப்பட்டவை
- இரண்டு எ (A) – 340 – 300 பயணிகள் விமானங்கள்
- ஒரு எ (A) – 330 -200 பயணிகள் விமானம்
- நான்கு கிபிர் போர் விமானங்கள்
- மூன்று கெ (K)-8 பயிற்சி விமானங்கள்
- இரண்டு எம்.ஜ.ஜி (MIG) – 27 ஜெட் போர் விமானங்கள்
- இரண்டு பெல் (bell) 412 உலங்கு வானூர்தி
- இரண்டு வி.வி.ஜ.பி (VVIP) 412 உலங்கு வானூர்தி
- இரண்டு எம்.ஜ (MI) -17 உலங்கு வானூர்தி
மூன்று K-8
சேதப்படுத்தப்பட்டவை
- இரண்டு – A-320 பயணிகள் விமானங்கள்
- ஒரு – A-340 பயணிகள் விமானம்
- ஒரு அண்டொனோவ் (Antonov) போக்குவரத்து விமானம்
- ஒரு எம்.ஜ (Mi) -24 உலங்கு வானூர்தி
- ஒரு பெல் (Bell) 412 உலங்கு வானூர்தி
- நான்கு கிபிர் போர் விமானங்கள்
- விடுதலைப்புலிகளால் நடத்தப்பட்ட இத்தாக்குதலானது இலங்கையின் பொருளாதாரத்தில் வரலாறு காணாத மாற்றத்தை ஏற்படுத்தியது.
- இத்தாக்குதலின் மூலம் சுமார் 375 மில்லியன் அமெரிக்க டாலர்களிற்கும் அதிகமான சொத்துக்கள் அழிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
- இத்தாக்குதலில் சில மறைமுகக் கரும்புலிகள் வெற்றிக்கு வித்திட்டு காற்றில் கலந்தனர்.
எம் மக்கள் மீது குண்டு வீசிய குண்டுப் பறவைகள் அவற்றின் இருப்பிடம் தேடிச்சென்று தீயில் கருக்கி தாய்மண்ணின் விடியலுக்காய் உறங்கும் தேசப்புயல்கள்.
0 comments:
Post a Comment