புத்தர் சிலைகளை சேதப்படுத்தி தலைமறைவான பிரதான சந்தேகநபர் அவருடைய மனைவி மற்றும் பிள்ளைகளை மாவனல்லை நகரில் விட்டுவிட்டு மீண்டும் தலைமறைவாகியுள்ளார்.
மாவனல்லை உட்படப் பல பிரதேசங்களில் புத்தர் சிலைகளை சேதப்படுத்திய குற்றச்சாட்டுக்காக 25 வயதுடைய முஹம்மட் இப்ராஹீம் சாதிக் என்ற பிரதான சந்தேகநபர் பொலிஸாரினால் தேடப்பட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த சந்தேகநபரின் புத்தளம் வணாதவில்லு பிரதேசத்திலிருந்த காணி ஒன்றை சுற்றிவளைத்த போது அங்கிருந்து பெரும் அளவிலான வெடிபொருட்கள் விசேட அதிரடிப்படையினால் மீட்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலுடன் குறித்த சந்தேகநபருக்கும் தொடர்புகள் இருக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகின.
சுமார் 5 மாதங்கள் தலைமறைவாகியிருந்த குறித்த சந்தேகநபர் நேற்று பிற்பகல் 1 மணியளவில் தனது மனைவி மற்றும் பிள்ளையை மாவனல்லை நகரில் விட்டுவிட்டு மீண்டும் தலைமறைவாகி உள்ளார்.
24 வயதுடைய பாத்திமா சாஹிதா மற்றும் அவரது பிள்ளை கண்கள் கட்டப்பட்டு, மாவனல்லை நகரிற்கு கொண்டுவந்து விடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
பின்னர் சந்தேகநபரின் மனைவி தனது தாயின் வீட்டுக்குச் சென்றுள்ளார். அங்கு குறித்த பெண்ணின் பெற்றோர் அவர்களை பாரமேற்க மறுத்துள்ளதுடன், பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் பாத்திமா சாஹிதாவை பொலிஸார் பொறுப்பேற்றுள்ளனர்.
இந்த நிலையில் கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையால் பொலிஸாரைால் தேடப்பட்டு வரும் சந்தேகநபர்களின் பெயர் பட்டியலில் இவரும் இவருடைய மனைவியும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment