'நாம போகாத பிளே ஆஃபுக்கு எவனும் போகக்கூடாது!' - ராஜஸ்தான் ராஜதந்திரங்கள் #RRvSRH!


இந்தப் போட்டியில் ஸ்மித் அவுட்டானதும், உள் நுழைந்தார் டர்னர். பந்துவீச வந்தார் அனுபவ வீரர் புவனேஷ் குமார். முதல் பந்தை டீப் ஸ்குயர் பக்கம் தள்ளிவிட்டு ஓடத் தொடங்கினார்.  புவனேஷ் குமார் சிரிக்க, டர்னரும் மெல்லிய புன்னகையை உதிர்த்தார். ராஜஸ்தான் ராயல்ஸின் டக் அவுட் முழுக்க ' டக் அவுட்' டர்னருக்காக கிளாப் தட்டியது.

'நாம போகாத பிளே ஆஃபுக்கு எவனும் போகக்கூடாது!' - ராஜஸ்தான் ராஜதந்திரங்கள் #RRvSRH

இரண்டு மாத திருவிழாக் கொண்டாட்டமான ஐபில் அதன் இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. ஒரு பக்கம் பைக்கில் டபுள் ஸ்டாண்டிங்கில் வந்துகொண்டு இருந்த கொல்கத்தா வரிசையாகத் தோற்று, அய்யோ பாவம் என ஏழாம் இடத்தில் தள்ளாடிக்கொண்டு இருக்கிறது. " இப்படியொரு வீக்கான பேட்டிங் லைன் இருக்கும் ராஜஸ்தானிடம் 175 ரன்களை டிஃபெண்டு செய்ய முடியவில்லை என்றால் , எதற்கு விளையாடணும் " எனக் கோபமாக பேட்டி கொடுத்திருக்கிறார் ஆல்ரவுண்டர் ரஸல். இப்படி கொல்கத்தா மீது தன் வேலையைக் காட்டி முன்னேறிய ராஜஸ்தான், அடுத்து உடைத்திருக்கும் பல்பு சன்ரைஸர்ஸ் ஐதராபாத். 

ஸ்மித்

கடந்த ஐந்து போட்டிகளில் அஷ்வினின் பஞ்சாப் ஒரு போட்டியில் வெற்றி பெற்றிருக்கிறது. கொல்கத்தா ஐந்து போட்டிகளையும் தோற்று இருக்கிறது. சன் ரைசர்ஸ் மூன்று போட்டிகளில் தோற்று இருக்கிறது. ஏழாம் இடத்தில் இருந்த ராஜஸ்தான் மூன்று போட்டிகளிலும், கடைசி இடத்தில் ' கெத்தாக, ஸ்டைலாக ' இருக்கும் ராயல் சாலஞ்ஸர்ஸ் பெங்களூரு நான்கு போட்டிகளிலும் வென்று இருக்கின்றன. நேற்று ராஜஸ்தான் உடைத்த பல்பில், நடந்த இன்னொரு விஷயம்., சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ப்ளே ஆஃபுக்கு தகுதி பெற்றுவிட்டது. ' அங்க அடிச்சா இங்க வலிக்கும்' என்பது போல், ராஜஸ்தான் ஐதராபாத்தை அடித்து, சென்னை முன் நகர்த்தி இருக்கிறது. நாளை இரவு, ராஜஸ்தான் ராயல்ஸும், ராயல் சாலஞ்சர்ஸும் மோத இருக்கின்றன. பேரில் மட்டுமே ராயலாக இருக்கு இந்த இரண்டு அணிகளில் யார் கடைசி இடத்துக்குச் செல்ல போகிறார்கள் என்பதைக் காலம் தான் பதில் சொல்லும். இந்தப் போட்டியில் இன்னொரு சாதனையும் நிகழ்ந்தது. ஒட்டுமொத்த ராஜஸ்தான் அணியும், கிளாப் தட்டி அதைக் கொண்டாடியது. அதை இறுதியாகப் பார்ப்போம். ஆம், டர்னர் பரிதாபங்கள் தான்.

வார்னர்

டாஸ் ஜெய்ச்சா 'என்ன பண்ணனும், பௌலிங் சூஸ் பண்ணணும்' என்னும் ஐபிஎல்லின் விதிக்கு ஏற்ப, பௌலிங் தேர்வு செய்தார் ராஜஸ்தானின் புதிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித். கேன் வில்லியம்ஸுடன், சாஹாவும் மீண்டும் ஐதராபாத்துக்கு களம் இறங்கினர். முதல் ஓவரை வருண் ஆரோன் வீசினார். இந்தியாவின் உள்ளூர் தொடர் ஒன்றுறில் 153 கிமீ வேகத்தில் பந்துவீச ஸ்போர்ட்ஸ் பக்கங்களின் தலைப்புச் செய்தியாக மாறினார் ஆரோன். ஆனால், மனிதருக்கு வேகம் வந்தளவு வேரியேசன் வரவில்லை. சில மாதங்களிலெயே, ஒரு நாள் டெஸ்ட் இரண்டிலும் வாய்ப்புகள் ஆரோனுக்கு டாட்டா சொன்னது. காயங்களும் துரத்தின. கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் இரண்டு விக்கெட் வீழ்த்த , ' அட , லைட்டா வெளிச்சம் தெரியுதே' என ஆச்சர்யப்பட வைத்தார் வருண் ஆரோன். . இந்த போட்டியிலும் முதலிரண்டு ஓவர்கள் சிறப்பாகவே வீசினார் (ஓவர் த்ரோ ஐந்து ரன்களுக்கு எல்லாம் பந்துவீச்சாளரைக் குறை சொல்லுதல் பாவம்) . கோபால் வீசிய பந்தில், வில்லியம்ஸின் போல்டாக, பவர் ப்ளே இறுதியில் 51 ரன்கள் எடுத்திருந்தது ஐதராபாத்.

இந்த சீசன் கேன் வில்லியம்ஸனுக்கு மறக்கக்கூடிய ஒன்றாகவே தற்போது வரை இருந்துவருகிறது. பாதி போட்டிகளில் காயம் காரணமாக விளையாடவில்லை. விளையாடிய ஐந்து போட்டிகளில் ஒரு போட்டியில்கூட 20 ரன்களைத் தாண்டவில்லை. என்னதான் ஆச்சு வில்லியம்ஸனுக்கு என சோகத்தில் இருக்கிறார்கள், அவரது ரசிகர்கள். #WorldCupIsComingடா வில்லியம்ஸன்!

மனீஷ் பாண்டே

சென்னைக்கு எதிராக 83 ரன்கள் அடித்த மனிஷ் பாண்டே, அந்தப் போட்டியில் ' நாட் அவுட்' என்பதால், அதே ஃபார்மை இந்தப் போட்டியிலும் தொடர்ந்தார். மற்றுமொரு முனையில், இந்த சீசனை உலகக் கோப்பை பயிற்சி போட்டிகளாகவே பாவித்து அடித்து வரும் வார்னரும் ஸ்கோர் செய்தார். மனிஷ் அடித்து ஆடினால், வார்னர் அடக்கி வாசித்தார்.37 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஸ்மித்தின் அட்டகாசமான கேட்ச்சால் அவுட் ஆனார். அடுத்து ஒவ்வொரு ஓவரிலும் , ரன் அடிப்பதற்கு பதிலாக விக்கெட்டை இழந்தவந்தது ஐதராபாத். கடைசி இரண்டு பந்துகளில் ரஷித் கான் புண்ணியத்தில் ஒரு பௌண்டரியும், சிக்ஸரும் மாட்ட, எட்டு விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்தது. கடைசி ஓவரில் அந்த அணி எடுத்த 18 ரன்கள் தான், ஆட்டத்தில் காஸ்ட்லியான ஓவர். இப்படி எல்லாம் இருந்தா விளங்கவா.

சென்ற போட்டியில் 170 ரன்களையே சேஸ் செய்துவிட்டோம், இதெல்லாம் ஜுஜூபி என ஜாலியாக களமிறங்கியது ராஜஸ்தான். பவர் ப்ளேவில் ரஷித் கான் வீசிய ஓவரில் லிவிங்ஸ்டன், ரஹானே இருவரும் ஆளுக்கு ஒரு சிக்ஸ் அடிக்க ரைட்டு, இந்த சீசனும் நம்மள விட்டுப் போகுதோ என டவுட் ஆனது சன்ரைசர்ஸ். பேபிம்மா சித்தார்த் கவுல் வீசிய ஓவரில் , அதை முடிவே செய்து இருப்பார்கள். பௌண்டரி, சிக்ஸர், பௌண்டரி, சிக்ஸர் என இருபது ரன்களை அந்த ஓவரில் அடித்தார் லிவிங்ஸ்டன். பவர் ப்ளே இறுதியில் 60 ரன்கள் எடுத்திருந்தது ராஜஸ்தான்.

ராஜஸ்தான் ராயல்ஸ்

சிறப்பான ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் கொடுத்த மகிழ்ச்சியில் இருவரும் அவுட்டாக, அடுத்து க்ரீஸுக்கு வந்தார் சஞ்சு பாய். கேப்டன் ஸ்மித் வின்னிங் இன்னிங்ஸ் எதையும் இந்தப் போட்டியில் ஆடவில்லை. 22 ரன்களுக்கு அவுட்டானார். சஞ்சு சாம்சன் இறுதிவரை இருந்து ஆட்டமிழக்காமல் வெற்றிக்கான ரன்களை எடுத்தார்.

டர்னர் பரிதாபங்கள்

ஆஸ்திரேலியாவின் ஆஷ்டன் டர்னர் சில போட்டிகள் விளையாடி இருந்தாலும், சோகம் அவரைத் துரத்திக்கொண்டே இருந்தது. கிங்ஸ் லெவன், டெல்லி கேப்பிடல்ஸ், மும்பை இந்தியன்ஸ் என இந்த சீசனில் டர்னர் விளையாடிய மூன்று போட்டிகளிலும் டக் அவுட் ஆனார். அதிலும் பஞ்சாபுக்கு எதிரான போட்டிதான், டர்னர் ஐபிஎல்லில் ஆடிய முதல் போட்டி . அதில் கோல்டன் டக். முதல் போட்டியில் டக் அவுட் ஆனபோது, இது ஹாட்ரிக் வரை செல்லுமென நினைத்து இருக்க மாட்டார் டர்னர். அடுத்த போட்டியில் பும்ரா வீசிய பந்தில் LBW முறையில் அவுட். அதுவும் கோல்டன் டக். என்னதான் ஆச்சு டர்னருக்கு என யோசித்து முடிப்பதற்குள், டெல்லி கேப்பிடல்ஸுடன் போட்டி. சரி, சின்ன பசங்களாச்சே என நம்பி இறங்கினார் 26 வயதான டர்னர். ' ஏ சின்னப் பையா ' என இந்த முறை டர்னரை அவுட் ஆக்கியது சீனியர் வீரர் இஷாந்த் ஷர்மா. அதற்கும் இஷாந்த் அந்தப் போட்டியில் எடுத்த ஒரே விக்கெட் டர்னர் தான். பும்ரா மும்பை போட்டியிலும் எடுத்த ஒரே விக்கெட் டர்னர் தான். இன்னொரு விஷயம், டெல்லிக்கு எதிராகவும் டர்னர் கோல்டன் டக். முதல் மூன்று போட்டிகள், மூன்றிலும் டக், அதுவும் கோல்டன் டக் என்கிற வெறி கொண்ட சாதனையை நிகழ்த்தி இருந்தார் டர்னர். அஜித் அகார்கர் நிச்சயம் பெருமை பட்டிருப்பார்.

ஸ்டீவ் ஸ்மித்

இந்தப் போட்டியில் ஸ்மித் அவுட்டானதும், உள் நுழைந்தார் டர்னர். டர்னரின் எஸ்டிடீ வேறு இப்படி இருக்க, பந்துவீச வந்தார் அனுபவ வீரர் புவனேஷ் குமார். முதல் பந்தை டீப் ஸ்குயர் பக்கம் தள்ளிவிட்டு ஓடத் தொடங்கினார். ஐபிஎல்லின் முதல் ரன்னை எடுத்தார் டர்னர். 'சிவாஜி அகர முகர எழுத்து சொன்ன தருணம் போல் ' ; ' பிக் பாஸில் சென்றாயன் ஓடிய தருணம் போல் ' ; ' கேம் ஆஃப் த்ரோன்ஸில் தியான் கிரேஜாய் யாராவைக் காப்பாற்றச் சென்றது போல்' இந்த ஒரு ரன் ஒரு வரலாற்று நிகழ்வு. புவனேஷ் குமார் சிரிக்க, டர்னரும் மெல்லிய புன்னகையை உதிர்த்தார். ராஜஸ்தான் ராயல்ஸின் டக் அவுட் முழுக்க ' டக் அவுட்' டர்னருக்காக கிளாப் தட்டியது. 

டர்னர்

ஷகிப் அல் ஹசனையும், தீபக் ஹூடாவையும் ஆட்டமிழக்கச் செய்த உனத்கட் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். உடைந்த பல்புகளை உடைப்பதற்கு எதற்கு அவார்டு?. ஒரு வேளை விஜய் ஷங்கர், புவனேஷ் குமார் என இருவரின் விக்கெட்டுகளையும் கேட்ச் செய்ததற்காக இருக்குமோ. நான்கு டிஸ்மிஸல்கள் ஆயிற்றே. சரி பல கோடி ரூபாய் பெட்ரோமேக்ஸான உனத்கட் இப்படி எதுனா வாடகைக்குப் போனால் தான் உண்டு. 

ராஜஸ்தான் ஆறாவது இடத்துக்கு முன்னேறி இருக்கிறது என்பது மட்டுமே இந்தப் போட்டியில் இருக்கும் ஒரே ஆறுதல்.

Share on Google Plus

About Nelli kuddy

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment